கிறிஸ்துமஸ் அதுவுமா இப்படியா? திரிஷா வீட்டில் நடந்த பெரிய சோகம்..
தென்னிந்திய சினிமாவில் ஒரு மிகப்பெரிய முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. ஆரம்பத்தில் துணை நடிகையாகத்தான் இந்த சினிமாவிற்குள் நுழைந்தார் திரிஷா. ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்திருப்பார். அதன் பிறகு மௌனம் பேசியதே திரைப்படம்தான் இவரை சினிமாவில் அடையாளம் காட்டியது. வசீகரிக்கும் தோற்றம், அழகான முகம் என இளசுகளை வெகுவாக கவர்ந்தார் திரிஷா.
தொடர்ந்து விஜய், அஜித்துக்கு லக்கி ஹீரோயினாக மாறினார். விஜயுடன் நான்கு படங்கள், அஜித்துடன் ஐந்து படங்கள் தொடர்ந்து ஹிட் கொடுத்தார். இதில் விக்ரமுக்கும் லக்கி ஜோடியாகத்தான் மாறினார். சாமி படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி அனைவரையும் ஈர்த்தது. பல முன்னணி ஹீரோக்களுடன் டூயட் போட்ட திரிஷா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்கவும் கவனம் செலுத்தி வந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார். மீண்டும் விஜயுடன் ஒரு படம், அஜித்துடன் ஒரு படம் இப்போது சூர்யாவுடன் ஒரு படம் என தனது மார்கெட்டை உயர்த்தி வருகிறார். இப்போது திரிஷா சூர்யாவுடன் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திரிஷா தற்போது ஒரு பதிவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டிருக்கிறார். அதில் அவருடைய மகன் ஷரோ இறந்துவிட்டதாகவும் கிறிஸ்துமஸ் நாளில் அதிகாலையில் இறந்தான் என்றும் அதனால் எனக்கும் என் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகுந்த வேதனை என்றும் சில நாள்கள் கழித்து என் வேலையை மீண்டும் தொடர்வேன் என்றும் பதிவிட்டிருக்கிறார்.
அந்த ஷரோ வேறு யாரும் இல்லை. அவர் செல்லமாக வளர்த்த நாய்தான். உடனே அந்த செல்ல நாய்க்கு செய்யவேண்டிய மரியாதை எல்லாம் செலுத்தியிருக்கிறார் திரிஷா. இது சம்பந்தமான புகைப்படத்தைத்தான் திரிஷா பதிவிட்டிருக்கிறார்.