Categories: Cinema News latest news

சும்மா இருந்த நான் இவன்களோட சிக்கிட்டேனே!… விடாமுயற்சியால் கடுப்பில் இருக்கும் திரிஷா!

Trisha: நடிகை திரிஷா தற்போது கோலிவுட்டின் வைரல் நாயகியாகி இருக்கிறார். இது அவருக்கு கோலிவுட்டில் இரண்டாம் இன்னிங்ஸ் என்று தான் கூற வேண்டும். இப்படி கவலையே இல்லாமல் பரபரப்பாக இருந்து வந்தவரை தற்போது விடாமுயற்சி படக்குழு மேலும் டென்ஷன் செய்து இருக்கிறது. அதுகுறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

நடிகை திரிஷா 20ஸ்களில் நாயகியாக எண்ட்ரி கொடுத்தவர். தொடர் வாய்ப்புகள் குவிந்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாக்களில் கொடிக்கட்டி பறந்தார். அவருக்கு திடீரென நிச்சயம் நடக்க கேரியர் சடாரென இறங்கியது. கிட்டத்தட்ட அவரின் இந்த கேப்பில் தான் நயன் வளர்ந்தார். இருந்தும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த திரிஷா கிட்டத்தட்ட சில வருட கேப்புக்கு பின்னர் தன்னுடைய இடத்தினை பிடித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்!.. ஷங்கர் கொடுத்த சரியான பதிலடி!.. எப்பவும் மறக்க மாட்டாரு!..

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து மீண்டும் தன்னுடைய கேரியரை உச்சத்துக்கு கொண்டு வந்தார். இதனை தொடர்ந்து விஜயின் லியோ படத்தில் ஜோடியாக இணைந்தார். அப்படமும் கிளிக் அடிக்க தற்போது திரிஷா கோலிவுட்டின் வைரல் நாயகியாகி விட்டார்.

விஜயுடன் ஹிட் அடிக்க அடுத்து அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நாயகியாக மாறினார். அப்போது வேண்டும் என்றால் சந்தோஷப்பட்டு இருக்கலாம். ஆனால் தற்போது அதுவே அவருக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. கிட்டத்தட்ட தற்போது திரிஷா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் என கைவசம் நிறைய படங்களை வைத்து இருக்கிறார்.

இதையும் படிங்க: நல்லா சொன்னீங்க!.. விஜய் அரசியல் இப்படித்தான் இருக்குமா? புளூ சட்டை மாறன் போட்ட பதிவு

Published by
Shamily