×

என்ன நடிச்சாலும் பழைய இடம் கிடைக்கவில்லை... படமும் வெளியாகலை... கடுப்பில் த்ரிஷா
 

த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் பரமபத விளையாட்டு படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் முடிந்தன.
 
 
என்ன நடிச்சாலும் பழைய இடம் கிடைக்கவில்லை... படமும் வெளியாகலை... கடுப்பில் த்ரிஷா

தமிழ் சினிமாவின் ஹாட் நாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை த்ரிஷா. ஜோடி படத்தில் ஒரு மூளையில் நடித்தவர். மௌனம் பேசியதே படம் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, விக்ரமுடன் இணைந்து அவர் நடித்த சாமி படம் அவருக்கு பெரிய அளவிலான வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து, தமிழ் சினிமாவின் எல்லா முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார். தொடர்ந்து, நாயகியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் போல.

ஆனால், புது நாயகிகளின் தொடர் வரவால் த்ரிஷாவின் கோலிவுட் மார்க்கெட் பெரிய சரிவை அடைந்தது. சகலகலா வல்லவன், என்னை அறிந்தால் படங்களுக்கு பிறகு த்ரிஷாவிற்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை. மற்ற நாயகிகள் செய்ததை பார்த்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தார். அது அவருக்கு சரிவை தான் கொடுத்தது. இதனிடையில்,  பெரிய இடைவேளைக்கு பிறகு 96 படத்தில் நடித்தார். நல்ல வரவேற்பை அப்படம் பெற்றும் கூட த்ரிஷாவின் இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாக அமையவில்லை.

அவர் நடிப்பில் உருவாகிய கர்ஜனை, பரமபத விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 ஆகைய படங்கள் பெட்டியில் முடங்கி இருக்கிறது. இதில் அம்மணி செம அப்செட்டில் இருக்கிறார். பரமபத விளையாட்டு படம் மட்டும் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News