Categories: Cinema News latest news

நிறுத்து! நிறுத்து!! இந்த தில்லாங்கடி வேலைலாம் வேணாம்… வதந்திக்கு தன் ஸ்டைலில் பதில் சொன்ன த்ரிஷா!

Trisha Rumour: த்ரிஷா திடீரென திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று வதந்திகள் பரவி வரும் நிலையில், தன்னுடைய ஸ்டைலில் அதற்கு மாஸான பதில் அளித்து இருக்கிறார். இதுகுறித்த மேலும் சில சுவாரஸ்ய தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

மௌனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக நடிக்க வந்தவர் த்ரிஷா. தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்தாலும் அவர் நடித்த சாமி படம் தான் அவருக்கு நல்ல ரீச்சை கொடுத்தது. அதனை தொடர்ந்து விஜய், அஜித்துக்கு மாறி மாறி ஜோடி போட்டார்.

இதையும் படிங்க:என்ன பார்த்தா அப்படியா தெரியுது!.. மார்க் ஆண்டனி டைரக்டரை கிட்டவே சேர்க்கல.. எஸ்.ஜே. சூர்யா பேச்சு!..

23 வருடமாக சினிமாவில் இருக்கும் த்ரிஷா சமீபகாலமாகவே டாப் நடிகர்களின் படங்களில் நடிக்கவில்லை. நயன் ஸ்டைலில் தனி நாயகியாக சில படங்களில் நடித்தார். ஆனால் அதுவும் அவருக்கு நல்ல வரவேற்பினை கொடுக்கவில்லை. மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்தார்.

இரண்டு பாகத்திலும் இவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருந்தார். அதனால் மீண்டும் த்ரிஷா லைம் லைட்டுக்குள் வந்து இருக்கிறார். தற்போது விஜய், அஜித், ரஜினிகாந்த் ஆகியோர் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதனால் மற்ற முன்னணி நடிகைகள் இவர் மீது கடுப்பில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: குந்தவைக்கு கெட்டிமேளம் ரெடி!… மலையாள மருமகளாகும் த்ரிஷா? வெளியான சூப்பர் தகவல்..

இந்நிலையில் த்ரிஷா முன்னணி மலையாள தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. 40 வயது ஆனதால் திடீரென திருமணம் ஏற்பாடு நடந்து விட்டதாக கூட கூறப்பட்டது. ஆனால் இந்த வதந்தி தற்போது உண்மை இல்லை என த்ரிஷாவே மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டு இருக்கும் மறுப்பில், டியர் “நீங்க யார் என்பது உங்களுக்கும் உங்க டீமுக்கும் தெரியும்”, “அமைதியாக இருங்கள் மற்றும் வதந்திகளை நிறுத்துங்கள்” சியர்ஸ்! எனப் பதிவிட்டு இருக்கிறார். ஆனால் இந்த பதிவு திருமணத்துக்கா இல்லை லியோ படத்திற்கா என பல சந்தேகங்கள் நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Published by
Shamily