×

`என்னைக் குப்பை மாதிரி ட்ரீட் பண்ணான்!’ - ரிலேஷன்ஷிப் அனுபவம் பகிர்ந்த நடிகர் மகள் 

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சஞ்சய் தத்தின் மூத்த மகள் திரிஷாலா தத், தனது மோசமான டேட்டிங் அனுபவம் குறித்து பகிர்ந்திருக்கிறார். 
 

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் திரிஷாலா, ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். `Ask me anything' என்ற பெயரில் ரசிகர்களிடம் பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார். அப்போது, ரிலேஷன்ஷிப்பில் நீங்கள் தவறு செய்ததுண்டா என ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார். முதலில் இந்தக் கேள்வியிலிருந்து நழுவிய திரிஷாலா, பின்னர் கொட்டித் தீர்த்துவிட்டார். 


அவர் கூறுகையில், `ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். எந்த வகையிலும் அவன் எனக்கு மரியாதையே கொடுக்க மாட்டான். சரி அவனுக்கு மனசு சரியில்லை போல... இன்னிக்கு சரியாயிடும்,... நாளைக்கு சரியாயிடும்னு நானும் விட்டுக்கொடுத்துட்டே வந்தேன். ஆனா, அந்த நாள் கடைசி வரைக்கும் வரவே இல்லை. நாளுக்கு நாள் நிலைமை இன்னும் மோசமாச்சு. 


எனக்கே தெரியாம கொஞ்சம் கொஞ்சமா என்னை என்னோட ஃபிரண்ட்ஸ்கிட்ட இருந்து பிரிச்சான். வீட்ல இருந்தாலும் வெளியே போனாலும் நான் அவன்கூட தான் பேசணும்னு நினைச்சான். மரியாதை இல்லாம கண்டபடி பேசுவான். என்னை ஒரு பொருட்டாவே மதிக்க மாட்டான். நானும் அவனுக்கு எவ்வளவோ சான்ஸ் கொடுத்தேன். ஆனா, `டேட்டிங்’என்ற பேர்ல நான் தனியாத்தான் இருந்தேன். சுருக்கமா சொல்லனும்னா என்னை அவன் குப்பை மாதிரி நடத்துனான்’’ என்று பொங்கியிருக்கிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News