
Cinema News
ரத்தம் வரும் வரை நடித்த ஐஸ்வர்யா ராய்.. சைலண்டாக மறைத்த மணிரத்னம்! படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!.
Published on
By
மணிரத்னம் இயக்கும் படங்களில் பொதுவாக பெரிய ஹீரோக்கள் நடிப்பது என்பது மிக அரிதாகவே நடக்கும். தளபதி, நாயகன் போன்ற திரைப்படங்கள் வந்த காலக்கட்டங்களில் கூட பெரிய கதாநாயகர்களை வைத்து படம் இயக்கினார்.
ஆனால் இப்போதைய தலைமுறையினருக்கிடையே வெளிவந்த கடல், செக்க சிவந்த வானம், பொன்னியின் செல்வன் வரை குறைவாகவே பெரிய நடிகர்கள் அவரது படத்தில் இருப்பதை பார்க்க முடியும. ஏனெனில் மணிரத்னம் தனது கதையை அப்படியே படமாக்க நினைப்பவர். நடிகர்கள் பேச்சை எல்லாம் அவர் கேட்கவே மாட்டார்.
நடிகர் ஜெயம் ரவியே இதை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இப்படி படப்பிடிப்பு நடக்கும்போது சில சமயங்களில் அதனால் அவதிகளும் ஏற்படுவதுண்டு. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ஐஸ்வர்யா ராய்க்கு நடந்த சம்பவம்:
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரமான நந்தினி தேவி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தார். அரசக்குல பெண் என்பதால் அவருக்கு பெரிய காதணிகளை மாட்டி விட்டனர். ஆனால் அவ்வளவு பெரிய காதணிகளை ஐஸ்வர்யாராய் அணிந்தது இல்லை. எனவே அது அவர்களுக்கு அதிக வலியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயத்தை உதவி இயக்குனர்களிடம் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். ஆனால் அவர்கள் அதை மணிரத்னத்திடம் சொல்லவே இல்லை. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயின் காதுகளில் ரத்தம் வந்து அந்த இடமே புண்ணாகி உள்ளது.
இதை பிறகுதான் மணிரத்னம் கவனித்துள்ளார். இனி சில நாட்களுக்கு ஐஸ்வர்யா ராய் ஒரு காதில் அணிகலனே போட முடியாத நிலை. ஆனால் படப்பிடிப்பு நடக்க வேண்டும்,. இதை எப்படி மறைப்பது என யோசித்த மணிரத்னம் அவரது ஒரு காது தெரியாதப்படி முடியை வைத்து மறைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ரசிகை அனுப்பிய கடிதத்தால் ஆடிப்போன நடிகை ரேவதி!.. என்னவா இருக்கும்!.
Pradeep: தமிழ் சினிமாவில் ஒரு சென்ஷேசன் பிரபலமாக தற்போது அறியப்படுபவர் நடிகர் பிரதீப் ரெங்கநாதன். கோமாளி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான...
சின்ன வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருவதால் சினிமாவை பற்றிய அறிவு அதிகம்...
விடுதலை 2 திரைப்படத்திற்கு பின் சூர்யாவை வைத்து வாடிவாசல் எடுக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். ஆனால் முழுக்கதையும் ரெடி ஆகாததால் சூர்யா நடிக்க...
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....