Connect with us
TRP

latest news

ஓரங்கட்டப்படும் சிறகடிக்க ஆசை… உள்ளே வந்த ஜீ தமிழ்… இந்த வார டிஆர்பி அப்டேட்..

TRP Rating: சின்னத்திரை சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்த கதைக்களத்தினை அறிய வாரம் இறுதியில் டிஆர்பி வெளியிடப்படும். அந்த வகையில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் டிஆர்பி லிஸ்ட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சில வருடங்களாக சன் டிவியின் சீரியல்களுக்கு விஜய் டிவி சரியான போட்டியாக இருந்தது. ஆனால் சில மாதங்களாக அந்த போட்டியில் சொதப்பி வருகிறது. இதனால் கடந்த வாரம் 10வது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலை துரத்திவிட்டு 5.59 டிஆர்பி புள்ளிகளுடன் ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியல் அந்த இடத்தை பிடித்துள்ளது.

9ம் இடத்தில் ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் 6.12 டிஆர்பி புள்ளிகளுடன் இரண்டாவது வாரமும் தக்க வைத்து கொண்டுள்ளது. 8வது இடத்தில் தொடர்ந்து சறுக்கி வந்து 6.45 புள்ளிகளுடன் அமர்ந்து இருக்கிறது சிறகடிக்க ஆசை சீரியல்.

இதையும் படிங்க: நடிகர்களுக்குப் பட்டம் தேவையா? மக்களைக் கேலிக்கூத்து ஆக்குற வேலை..! பொங்கும் பிரபலம்

சன் டிவியில் தொடங்கப்பட்ட ரஞ்சனி சீரியல் முதல் வாரமே நல்ல வரவேற்பை பெற்று 6.87 புள்ளிகளுடன்  7வது இடத்தை பிடித்துள்ளது.  6வது இடத்தில் சன் டிவியின் இராமாயணம் சீரியல் 8.22 டிஆர்பி புள்ளிகளுடன் தன்னுடைய இடத்தை தக்கவைத்து உள்ளது.

ஐந்தாம் இடத்தில் மருமகள் சீரியல் 8.70 புள்ளிகளுடன் உள்ளது. திருமண டிராக் அடுத்த வாரம் இன்னும் முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்காம் இடத்தில் சன் டிவியின் சுந்தரி சீரியல், 8.80 டிஆர்பி புள்ளிகளுடன் 4ம் இடத்தை பிடித்திருக்கிறது. 

3ம் இடத்தில் சிங்கப்பெண்ணே 9.06 புள்ளிகளுடன் உள்ளது. 2ம் இடத்தில் உள்ள மூன்று முடிச்சு சீரியலுக்கு 9.57 புள்ளிகளும், முதலிடத்தில் உள்ள கயல் சீரியல் 10.02 புள்ளிகளும் பெற்றுள்ளது. கடந்த சில வாரங்களாகவே முதல் ஐந்து இடத்தை சன் டிவியின் சீரியல்கள் தான் பிடித்து வருகிறது.

இதையும் படிங்க: கோபியை கிழித்த ராதிகா… பண விஷயத்தை கறந்த ரோகிணி… செந்திலை கஷ்டப்படுத்தும் பாண்டியன்..

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top