Connect with us
sun serials

latest news

டிஆர்பியில் டாப்5… சன் டிவி சீரியல்களின் இன்று நடக்க இருப்பது இதுதான்!…

Sun serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான் தற்போதைய டிஆர்பியில் முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கிறது. அந்த சீரியல்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த ப்ரோமோ வெளியிடப்பட்டிருக்கிறது.

கயல்:  எழில் அம்மா நீ எதற்காக இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டியோ அது நடக்காது என கயலிடம் கூறுகிறார். பைனான்சியர் பெரியப்பாவிடம் நீங்கள் இந்த குடும்பம் நல்லா இருக்க கூடாதுன்னு தானே நினைப்பீங்க. இப்ப என்ன பாசத்தை காட்டி சீன் போடுறீங்க என்கிறார். கயல் எப்படி பணம் வந்ததுன்னு யோசிக்கிறீங்களா என எழில் அம்மாவிடம் கேட்கிறார்.

இதையும் படிங்க: கடவுள் நம்பிக்கை இல்லாத கமலை கலாய்த்த நடிகர்… அவரு சொல்றதுல என்ன தப்பு?

மருமகள்: பிரபு இந்த குடும்ப பாரத்தை இறக்கி வச்சிட்டு தனி குடித்தனம் போயிட்டா என் ஆசை முழுசா நிறைவேறிடும் என்கிறார். வேல்விழி மருத்துவமனையில் அவனை என்ன பண்ணுறது டேடி என்கிறார். அதிரை பிரபுவிடம் பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுத்து எங்க அப்பா மானத்தை காப்பாற்றினதுக்கு நன்றி என்கிறார்.

சுந்தரி: அனுக்குட்டி கார்த்திகிடம் உங்களுக்கு யாருமே இல்லையா என்கிறார். கார்த்திக்கும் இல்லை எனக் கூற அனு பார்க்கிறார். சுந்தரி பைனான்சியரை வீட்டிற்குள் வைத்து மிரட்டிக்கொண்டு இருக்கிறார். கார்த்திகிடம் நீங்க என்ன செஞ்சீங்க  என அனுகுட்டி கேட்கிறார்.

சிங்கப்பெண்ணே: மகேஷ் அன்புக்கு கால் செய்து ஆனந்தியை கேட்கிறார். இங்கு இருப்பதாக அன்பு கூறுகிறார். ஆனந்தியிடம் பேசும் மகேஷ் நான் வரேன். நேரில் பேசலாம் என்கிறார். ஆனந்தி மன்னிச்சிடுங்க நான் வரலை என போனை வைத்துவிடுகிறார். அன்பு தங்கை அண்ணன் ஊருக்கு போகாம இருக்கணும்னா அது உங்க காதலால தான் முடியும் என ஆனந்திக்கு கூறுகிறார்.

இதையும் படிங்க: ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து!… இரு தரப்புக்கும் ஐகோர்ட் கொடுத்த உத்தரவு?!… திடீர் ட்விஸ்ட்..!

மூன்று முடிச்சு: சூர்யாவின் சரக்கு பாட்டிலை நந்தினி உடைக்க அதுக்கு உனக்கு என்ன உரிமை இருக்கு என சூர்யா சத்தம் போடுகிறார். கழுத்துல திடீரென தாலி கட்டுனீங்களே உங்களுக்கு என்ன உரிமை இருந்துச்சு என நந்தினி கேட்கிறார். மாதவிக்கு டீ கொடுக்கும் நந்தினியிடம் சுந்தரவல்லிக்கு கிரீன் டீயை கொடுக்க சொல்லி அனுப்புகிறார். போன் பேசிக் கொண்டிருக்கும் சுந்தரவல்லி அந்த டீயை நந்தினி இதை எடுத்து ஊற்றிவிட்டு அவரை திட்டுகிறார்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top