1. Home
  2. Latest News

TTF Vasan: ஏவிஎம் சரவணன் இறந்துட்டாரா? டிடிஎஃப் வாசன் கொடுத்த ரியாக்‌ஷன்.. அடுத்து சொன்னதுதான் ஹைலைட்டு

vasan
இன்னும் ஒரு படம் கூட முழுசா வெற்றியடையவில்லை. அதற்குள் இவ்வளவு அசால்ட்டான பதிலா

டிடிஎஃப் வாசன்:

யூடியூப் சேனல் மூலமாக பிரபலமானவர்தான் டிடிஎஃப் வாசன். இவரது நடிப்பில் தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ஐபிஎல். ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படமாக இது வெளியாகியிருக்கிறது. படத்தில் அபிராமி மற்றும் கிஷோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று ஐபிஎல் படத்தை புரோமோட் செய்து வருகிறார் டிடிஎஃப் வாசன்.

இவருக்கு இளைஞர்களை விட குழந்தைகள்தான் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். தன்னுடைய யூடியூப் சேனல் மூலமாக பைக் சாகசம் செய்து அதை வீடியோவாக வெளியிட்டு அதிலிருந்தே ஏகப்பட்ட ரசிகர்களை தனதாக்கி கொண்டார் டிடிஎஃப் வாசன். அதன் மூலம் கிடைத்த பிரபலம்தான் இன்று வெள்ளித்திரைக்குள் நுழைந்திருக்கிறார். ஆரம்பத்தில் மஞ்சள் வீரன் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

ஏவிஎம் சரவணன் மறைவு:

ஆனால் அந்தப் படம் ஆரம்பிக்கப்படாமலேயே இருந்தது. அதனால் அந்தப் படத்தில் இருந்து விலகினார் டிடிஎஃப் வாசன். இதற்கிடையில் ஓட்டுநர் உரிமம் தொடர்பாக அவர் மீது சட்ட சிக்கல்கள் இருந்தன. இப்படி பல பிரச்சினைகளுக்கு நடுவேதான் அவர் நடித்த ஐபிஎல் படம் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் டிடிஎஃப் வாசனிடம் ‘திரைத்துறையின் ஜாம்பவானான ஏவிஎம் சரவணன் இறந்துவிட்டார். அதை பற்றி ?’ என்ற ஒரு கேள்வியை கேட்டனர்.

உடனே டிடிஎஃப் வாசன், ‘என்னது ஏவிஎம் சரவணன் இறந்துட்டாரா? சாரிங்க காலையில நான் தூங்கிக் கொண்டிருந்தேன். அதனாலதான் எனக்கு தெரியல’னு சொல்லி சமாளித்தார். திரைத்துறையில் இருந்து கொண்டு எப்பேற்பட்ட ஒரு ஆளுமை ஏவிஎம் சரவணன்? நேற்றைய் செய்திகள் பத்திரிக்கைகள் சமூக வலைதளங்கள் என எங்கு பார்த்தாலும் இந்த செய்திதான் ஓடி கொண்டிருந்தன.

அசால்ட்டான பதில்:

ஆனால் டிடிஎஃப் வாசன் கொடுத்த பதில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. இன்னும் ஒரு படம் கூட முழுசா வெற்றியடையவில்லை. அதற்குள் இவ்வளவு அசால்ட்டான பதிலா என்று கிண்டலடித்து வருகின்றனர். 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.