Categories: Cinema News latest news

திரும்புன இடமெல்லாம் கன்னிவெடி வச்சா எப்படி? கைது செய்யப்பட்ட வாசன் கதறல்…

TTF Vasan: நடிகர் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் கோர்டுக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் செய்தியாளர்களிடம் பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டத்தினை சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன். யூட்யூப்பரான வாசன் பைக்கில் சாகசம் செய்து பிரபலமானார். பைக் ரேஸரான இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருந்தனர். இவரின் ரசிகர் சந்திப்பு வைரலானது. அதில் இருந்து இவருக்கு ஏழரையும் தொடங்கியது. அடிக்கடி கேஸில் சிக்கினார்.

இதையும் படிங்க: அப்படியா செஞ்சாரு கவுண்டமணி? அலும்பு தாங்கலப்பா.. ஆனா அப்புறம் நடந்தது தான் ஆச்சரியம்..!

ஒருக்கட்டத்தில் பைக் ஓட்டிச்செல்லும் போது விபத்து ஏற்பட்ட வாசனை பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் பொருட்டு வண்டி ஓட்டியதாக கைது செய்யப்பட்டார். அதனுடன் அவரின் லைசன்ஸும் பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சில வாரங்கள் கழித்தே ஜாமீனில் வெளிவந்தார்.

தன்னுடைய யூட்யூப்பில் சாதாரண வீடியோக்களை பதிவிட்டு வந்தார். பிரச்னை இல்லாமல் சென்று கொண்டு இருந்த நிலையில் மீண்டும் வாசன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மதுரை வழியாக தூத்துக்குடி சென்ற வாசன் கார் ஓட்டிக்கொண்டே போன் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரையை  சேர்ந்த காவலர் மணிபாரதி புகார் கொடுத்து இருக்கிறார்.

இதையும் படிங்க: தக் லைஃப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. கமல், சிம்பு சேர்ந்து செய்த அலப்பறை.. செம ட்ரீட் இருக்கு!..

இதை தொடர்ந்து டிடிஎஃப் வாசன் வீடியோ வைரலாகி வருகிறது. கார் விபத்தில் ஒரு மூதாட்டி பலி, பாலின சோதனை செய்து அதை வீடியோவாக வெளியிட்ட இர்பானுக்கு மட்டும் மன்னிப்பு கடிதத்துடன் விடும் சட்டம் ஏன் டிடிஎஃப் வாசனை மட்டும் தொடர்ந்து தண்டிக்கிறது என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர்.

Published by
Shamily