எங்ககிட்டேவா? டிடிவி தினகரன் எப்பேற்பட்ட அஜித் ரசிகர் தெரியுமா? அவரே சொன்ன தகவல்

by Rohini |
dinakaran
X

dinakaran

அஜித் அறிக்கைக்கு பிறகு தான் அஜித்தே கடவுளே என்ற கோஷம் இப்போது காதுகளில் ஒலிப்பதில்லை. அதற்கு முன்பு வரை அவருடைய ரசிகர்களும் சரி பொது இடங்களில் எந்த கூட்டம் கூடினாலும் சரி முதலில் கேட்பது அஜித்தே கடவுளே என்ற ஒரு கோஷம்தான். அது மிகவும் ட்ரெண்டாகி இணையதளத்தில் வைரலானது. இது அஜித் ரசிகர்களை தாண்டி ஒரு சில பேரை கடுப்படையவும் செய்தது .

ஒரு கட்டத்திற்கு மேலாக அரசியல் வரை சென்று அரசியல் தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த வகையில் திருப்பூரில் ஒரு முகாமிற்கு சென்ற டிடிவி தினகரன் அந்த கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென மாணவிகள் அஜித்தே கடவுளே என கோஷமிட்டதை அறிந்து அவருடைய பேச்சை நிறுத்திக் கொண்டார். அருகில் இருந்த தன்னுடைய செயலாளரிடம் என்ன என கேட்டு மீண்டும் தனது பேச்சை தொடங்கினார்.

இதன் பிறகு தான் அஜித்தின் அறிக்கை பறந்தது. ஏனெனில் பொது இடங்களையும் தாண்டி இந்த மாதிரி அரசியல் கூட்டங்களிலும் தன்னுடைய பெயர் அடிபடுகிறது என்பதை அறிந்து கொண்ட அஜித் துபாயிலிருந்து சென்னை வந்ததும் முதல் வேளையாக அறிக்கையை வெளியிட்டார். அதில் மற்றவர்களை துன்புறுத்தும் செயல்களை செய்ய வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

தன் பெயரை மட்டும் வைத்து அழைத்தால் போதும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு அஜித்தே கடவுளே என்பதில் கடவுளே என்பதை மட்டும் எடுத்துவிட்டு இப்போது அஜீத்தே அஜித்தே என கோஷமிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று டிடிவி தினகரன் அந்த சம்பவத்தை பற்றி ஒரு பேட்டியில் கூறினார். அவர் கூறும் போது திடீரென அஜித்தே கடவுளே என மாணவிகள் கத்த என்னுடைய செயலாளரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.

நானும் ஒரு அஜித் ரசிகர் தான். அவருடைய படங்களை பார்த்து இருக்கிறேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். திடீரென ஏதாவது ஒரு கூட்டத்திற்கு போகும்போது யாராவது குழந்தைக்கு பெயர் வையுங்கள் என சொல்லும் போது நான் பலமுறை அஜித் பெயரை தான் வைத்திருக்கிறேன் என கூறி இருக்கிறார் டிடிவி தினகரன்.

Next Story