சாவு வீட்டை சர்க்கர்ஸ் கூடாரமா மாத்துறீங்களே அசிங்கமா இல்லை!.. சாட்டையை சுழற்றிய ராதிகா!..

 
backyaraj

மூத்த நடிகரும், இயக்குநரும், எழுத்தாளருமான கே. பாக்யராஜின் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் இரண்டு நாட்களாக உடனிருந்த நடிகை ராதிகா சரத்குமார், அங்கு நிலவிய சூழ்நிலையைப் பற்றி வேதனையுடன் சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "மிகவும் சிறப்பான 50 ஆண்டுகால நட்புக்கும், ஒரு சிறந்த படைப்பாளிக்கும், முதிர்ச்சியான எழுத்தாளருக்கும், சினிமாவில் அற்புதமான எல்லைகளை வகுத்தவருக்கும், என்னுடன் பல மகிழ்ச்சியான தருணங்களையும் சிறந்த பணிகளையும் பகிர்ந்துகொண்டவருக்கும், அமைதியான மற்றும் உறுதியான விசுவாசத்துடன் என் குடும்பத்தினருக்கு எப்போதும் துணையாக நின்றவருக்கும் ஒரு இறுதி விடைபெறல்" என்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

radi

மேலும், "அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இது ஒரு அதிர்ச்சிகரமான விடைபெறலாக அமைந்தது. ஆனால், அமைதியாக துக்கம் அனுசரிக்கப்பட வேண்டிய அந்த இடம், அஞ்சலி செலுத்த வந்தவர்களின் கூட்டத்தால் ஒரு சர்க்கஸ் போல மாறியது வேதனையளிக்கிறது. நாம் எப்போது, எப்படி இவ்வளவு உணர்ச்சியற்றவர்களாக மாறினோம்?" என வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

bhag

அதோடு, இதுபோன்ற சூழ்நிலைகள் இனி ஏற்படாத வகையில் அரசாங்கமும் திரைத்துறையும் இணைந்து முறையான வழிகாட்டுதல்களையும், ஒருங்கிணைந்த நிர்வாக ஏற்பாடுகளையும் வகுத்து, மறைந்தவர்களுக்கு உரிய கண்ணியத்துடன் இறுதி அஞ்சலி செலுத்தும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவரது இந்த உருக்கமான பதிவு, மறைந்த கலைஞர்களின் இறுதி நிகழ்வுகளில் தனியுரிமை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து சமூக வலைதளங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

From Around the web