Categories: Cinema News latest news

செஞ்சீங்களா முதல்ல மைக்க சரி செஞ்சீங்களா?.. சத்தமே இல்ல.. ஊமை படம் காட்டிய விஜய்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். சினிமாவில் உச்சம் தொட்ட பின்னர் நடிகர்கள் அரசியல் வருவது என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரம்பரியமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி ஆரம்பித்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தற்பொழுது ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுதான் தனது கடைசி படம் என்று அறிவித்துள்ளார். இந்த படம் 2026 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் விஜய் தனது அரசியல் வருகையை விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அது மட்டும் இல்லாமல் அந்த மாநாட்டில் தனது அரசியல் எதிரிகள் யார் என்பதை வெட்ட வெளிச்சம் போட்டுக்காட்டி விட்டார். விஜய்யின் பேச்சு அரசியல் எதிரிகளிடம் ஒரு கலக்கத்தை உண்டு பண்ணியது. அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் சமீபத்தில் நடத்தினார். அங்கேயும் தனது அனல் பறக்கும் பேச்சால் அரசியல் எதிரிகளை தோலுரித்தார்.

இம்முறை விஜயின் பேச்சு பலரின் கவனத்தைப் பெற்றது. இருந்த போதிலும் விஜய் மாநாட்டில் மட்டும் தான் பேசிக் கொண்டிருக்கிறார். மற்றபடி தமிழ்நாட்டில் பல பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதை எதிர்த்து விஜய் ஏன் குரல் கொடுக்கவில்லை மற்றும் வொர்க் பிரம் ஹோம் அரசியல் செய்து வருகிறார். விஜய் அதை விட்டுவிட்டு களத்தில் வந்து மக்களோடு மக்களாய் நின்று போராட வேண்டும் என்று அவர் மீது பட விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

சமீபத்தில் சென்னையில் நடந்த துப்புரவு தொழிலாளர்களின் போராட்டத்தில் கூட பங்கேற்காத விஜய் அவர்களை வீட்டில் அழைத்து இதிலும் வொர்க் பிரம் ஹோம் அரசியல் செய்திருக்கிறார். இதற்கும் பல கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் மதுரை மாநாட்டை தொடர்ந்து விஜய் இன்று திருச்சியில் தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார்.

திருச்சியில் இன்று காலை 10:30 மணிக்கு மரக்கடை பகுதியில் விஜய் தனது முதல் தேர்தல் பரப்புரையில் பேசுவதாக இருந்தது. காலையில் 10 மணிக்கு திருச்சி வந்த விஜய் எதிர்பாராத விதமாக வந்த கட்டுக்கடங்காத கூட்டத்தின் காரணமாக விஜய் அந்த இடத்திற்கு எறும்பு போல் ஊர்ந்து ஊர்ந்து மதியம் மூன்று மணி அளவில் வந்தார்.

தனது அனல் பறக்கும் பேச்சால் திருச்சியை அலர விடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர் பயன்படுத்தும் மைக் வேலை செய்யாமல் போய்விட்டது. விஜய் என்ன பேசுகிறார் என்று ரசிகர்களுக்கு ஒழுங்காக கேட்டதா? என்பது கூட தெரியவில்லை.

அதன் பின் மைக் வந்தவுடன் கடகடகடவென பேப்பரில் எழுதிக் கொண்டு வந்ததை வாசிக்க ஆரம்பித்து விட்டார். பின்னர் இத்துடன் தன்னுடைய உரையை முடித்துக் கொள்வதாக கூறி உடனே கீழே இறங்கி விட்டார். சரியான திட்டமிடுதல் இல்லாமல் கை அசைத்தால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பின்னாடி வருவார்கள் என்ற மமதையில் விஜய் இஷ்டத்துக்கு ஏதேதோ செய்கிறார் என்று அரசியல் பிரபலங்கள் விமர்சித்து வருகின்றனர்.

Published by
SATHISH G