அவசர அவசரமாக உடற்கூராய்வு ஏன் செய்தார்கள்?!.. தவெக வழக்கறிஞர் ஆவேசம்!..
Karur Vijay: நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் கரூர் சென்றிருந்த போது அவர் பேசிக் கொண்டிருந்த இடத்தை சுற்றி மக்கள் கூடியிருந்த நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தமிழகமெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் மட்டும் நடந்த சோக நிகழ்வு:
விஜய் இதற்கு முன் இரண்டு மாநாடுகளை நடத்தினார். கடந்த 13ஆம் தேதி திருச்சி, அரியலூர் போன்ற பகுதிகளிலும், 20ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திலும் பேசினார். ஆனால் அங்கெல்லாம் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. ஆனால் அவர் கடந்த சனிக்கிழமை மதியம் நாமக்கல்லில் பேசி முடித்துவிட்டு கரூர் சென்ற போதுதான் இந்த அசம்பாவிதம் நடந்திருக்கிறது.
திமுகவினர்தான் காரணம்:
துவக்கம் முதலில் இந்த சம்பவத்திற்கு முழு காரணம் கரூரிரை சேர்ந்த திமுகவினர்தான் என அப்பகுதி மக்களும், தவெகவினரும் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார்கள். திடீரென அந்த பகுதியில் 15 ஆம்புலன்ஸ் வட்டமடித்தது. அதில் தவெக கொடி கட்டப்பட்டிருந்தது. மற்ற வாகனங்களை உள்ளே விடாத போலீஸ் அந்த ஆம்புலன்களை உள்ளே அனுமதித்தது. தவெக துண்டை மேலே போட்டுக்கொண்டு சிலர் கூட்டத்தில் கலவரத்தை உருவாக்கினார்கள்.
கூட்டத்தில் கலவரம்:
விஜயின் மீது கல் மற்றும் செருப்புகளை வீசினார்கள். ஆம்புலன்ஸ் வந்ததால் மக்கள் செல்ல வழி இல்லாமல் பின்னே தள்ளப்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கியும், சாக்கடையில் விழுந்தும் பலியானார்கள். இது முழுக்க முழுக்க திட்டமிட்ட சாதி. இதற்கு பின்னணியில் இருப்பது கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர்’ என்றெல்லாம் அவர்கள் ஆவேசமாக பேசி வருகிறார்கள்.
இந்நிலையில், தற்போது செய்தியாளர்களிடம் பேசிய தவெக வழக்கறிஞர் ‘உயிரிழந்தவர்களுக்கு அவசர அவசரமாக உடற்கூறு ஆய்வு செய்தது ஏன்? அதுவும் உயிரிழந்த அனைவரையும் ஒரே நேரத்தில் உடற் கூராய்வு செய்ய அவ்வளவு மருத்துவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு அதாவது மாலை 6 மணிக்கு பின் உடற்கூராய்வு செய்யக்கூடாது என விதி இருக்கிறது.
உடற்கூராய்வில் சந்தேகம்:
ஆனால் அதை இவர்கள் பின்பற்றவில்லை. விஜய் பிரச்சாரம் செய்த இடத்தில் அதிக அளவு ஆம்புலன்ஸ் வந்ததிலும் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. உண்மையிலேயே தகுதியான மருத்துவர்கள்தான் உயிரிழந்தவர்களுக்கு உடற் கூராய்வு செய்தார்களா என்கிற கேள்வி வருகிறது. ஒரே நாள் இரவில் 39 பேருக்கு உடனுக்குடன் உடற்கூராய்வு செய்தது எப்படி சாத்தியமானது?’ என்கிற பல கேள்விகளையும் அவர் எழுப்பி இருக்கிறார்.
