
latest news
கரூர் சம்பவம்: உயிரிழந்தவர்களுக்கு தவெக சார்பில் 20 லட்சம்!.. விஜய் அறிவிப்பு….
Karur: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய் நேற்று தனி விமான மூலம் திருச்சி சென்று அங்கிருந்து காரில் நாமக்கல் சென்றார். நாமக்கல்லில் மதியம் 3 மணி அளவில் மக்களின் முன்பு பேசினார். அதன்பின் அங்கிருந்து கரூருக்கு சென்று இரவு 7 மணிக்கு மக்கள் முன்பு பேசினார்.
தவெகவினர் அனுமதி கேட்டிருந்த இடம் லைட் ஹவுஸ் பகுதி. அங்கு பல ஆயிரம் பேர் கூடினாலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காது. ஆனால், விஜய்க்கு பேச போலீசார் அனுமதி அளித்திருந்த வேலுச்சாமிபுரம் பகுதி மிகவும் குறுகிய பகுதி. அதனால் விஜயின் வாகனம் வந்தபோது கூட்டணி செல்லில் பலரும் சிக்கி இருக்கிறார்கள்.
குறிப்பாக ஒருவர் மீது ஒருவர் விழுந்து, சாய்ந்து அருகில் இருந்த சாக்கடையில் பலரும் விழுந்து இவ்வளவு உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கிறது. இதில் பெரிய சோகம் என்னவெனில் விஜய் 15 நிமிடங்கள் அங்கு பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்ற பிறகுதான் பலரையும் அங்கிருந்து தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அதற்குள் 29 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 10 பேர் இறந்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் தவெகனரை கடும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. நேற்று இரவு சென்னை வந்த விஜய் இன்று காலை தவெக நிர்வாகிகளிடம் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை செய்தார். முடிவில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்கும் 20 லட்சம் நிதி உதவி செய்யப்படும் எனவும், காயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சம் கொடுக்கப்படும் எனவும் தவெக சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.