TVK Vijay: கரூரில் 33 பேர் மரணம்!.. தவெக தலைவர் விஜய் கைது?.. பரபர அப்டேட்!…
நடிகரும் தவெக தலைவருமான விஜய் மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மரணமடைந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை திருச்சியில் இருந்து நாமக்கல் சென்ற தவெக தலைவர் விஜய் மதியம் 3 மணியளவில் நாமக்கல்லில் பேசிவிட்டு அங்கிருந்து கரூர் கிளம்பி சென்றார். விஜயை நேரில் பார்க்கும் ஆவலோடு அங்கு தவெக தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களும் பல்லாயிரம் பேர் காத்திருந்தனர்.
மாலை சுமார் 7 மணியளவில் விஜய் கரூர் சென்று போலீசார் அனுமதி அளித்திருந்த இடத்தில் மக்கள் முன்பு பேசினார். அப்போதே சிலருக்கு மயக்கம் ஏற்பட விஜயே அவர்களுக்கு தண்ணீர் பாட்டில் கொடுத்து உதவினார். அதன்பின் கூட்ட நெரிசலில் அதிகம் பேர் சிக்கி பலரும் அங்கே மயக்கம் அடைய ஆம்புலன்ஸ் உதவியுடன் அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .
அதற்கிடையில் விஜய் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். கூட்ட நெரிசலில் சிக்கி அங்கேயே 29 பேர் மரணம் அடைந்து விட்டதாக மருத்துவ வட்டாரங்கள் சொல்கிறது. மீதி உள்ளவர்களுக்கு தற்போது சிகிச்சைகளை அளிக்கப்பட்டு வருகிறது.
6 குழந்தைகள், 16 பெண்கள் என இதுவரை மொத்தம் 33 பேர் மரணம் அடைந்து விட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஆந்திராவில் புஷ்பா 2 திரைப்படம் வெளியான போது ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பதற்காக அப்படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார்.
எனவே போலீசார் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்து அன்று இரவே அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இரவு சிறையில் இருந்த அல்லு அர்ஜூன் அடுத்த நாள் காலை ஜாமினில் வெளியே வந்தார். தற்போது கரூரில் 33 பேர் வரை உயிரிழந்திருப்பதால் காவல்துறை விஜயின் மீதும் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வாய்ப்பிருப்பதாக பலரும் சமூக வ்லைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ஏற்கனவே அந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த தவெக மாவட்ட செயலாளரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
