TVK Vijay: மீண்டும் மக்களை சந்திக்க வரும் விஜய்!.. பக்கா பிளான் ரெடி!.. பரபர அப்டேட்!...
நடிகரும், தவெக தலைவருமான விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து தனது அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வந்தார். இரண்டு மாநாடுகளையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அந்த மாநாடுகளில் 8 முதல் 10 லட்சம் பேர் வரை கலந்து கொண்டார்கள். விஜய்க்கு கூடும் மக்கள் கூட்டம் தமிழக அரசியலில் விவாதங்களை ஏற்படுத்தியது.
பேசும் இடமெங்கும் அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ் போன்ற எந்த கட்சியும் ஒரு குறிப்பிட்ட பேசாமல் திமுகவை மட்டுமே அதிகமாக விமர்சித்து வந்தார் விஜய். அதோடு, ஒவ்வொரு சனிக்கிழமையும் சில மாவட்டங்களுக்கு சென்று மக்கள் சந்திப்பை நடத்தி வந்தார். அப்படி அவர் கரூர் சென்ற போது அங்கு ஏற்பட்ட அசம்பாவிதத்தால் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்து 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் விஜயை முடக்கி போட்டு விட்டது. கடந்த 3 வாரங்களுக்கும் மேல் அவர் வீட்டிலேயே இருக்கிறார். ஆனாலும், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தாரோடு வீடியோ காலில் பேசிய விஜய் அவர்களின் வங்கி கணக்கில் 20 லட்சத்தை செலுத்தவும் ஏற்பாடு செய்தார்.அதேநேரம் இன்னும் அவர் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்கவில்லை. அதற்காக தவெக தரப்பில் காவல்துறையிடம் அனுமதியும் கேட்கப்பட்டது. ஒருபக்கம் பாதிக்கப்பட்ட மக்களை தனது பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து சந்திக்கும் திட்டமும் விஜயிடம் இருப்பதாக செய்திகள் வெளியானது.

கட்சித் தலைவர் இப்படியே முடங்கி கிடந்தால் கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்கிற கேள்வியும், அச்சமும் தவெக நிர்வாகிகளுக்கு எழுந்திருக்கிறது. விஜய் இதிலிருந்து மீண்டு மீண்டும் மக்களை சந்திக்க வர வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.இந்நிலையில் விஜய் மீண்டும் தனது அரசியல் நடவடிக்கைகளை துவங்குகிறார் எனவும் மக்களை சந்திக்கும் களப்பணிக்கு அவர் திரும்பவிருப்பதாகவும் தற்போது செய்திகள் கசிந்துள்ளது.
கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரித்து வருவதால் விஜய் மிகவும் கவனமுடன் செயல்பட திட்டமிட்டு இருக்கிறாராம். குறிப்பாக ரோட் ஷோக்களை தவிர்த்து விட்டு பொதுக்கூட்டங்களை நடத்த அவர் திட்டமிட்டிருக்கிறாராம். அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பொதுக்கூட்டம் நடத்தலாம் என்பது அவரின் எண்ணமாக இருக்கிறதாம். அதிலும் மதியம் 3 முதல் 5 மணிக்குள் பொதுக்கூட்டத்தை முடித்து விடவும் அவர் முடிவு செய்திருக்கிறாராம்.
விஜயின் இந்த பயணத்திட்டம் குறித்த அப்டேட் அடுத்த வாரம் வெளியாகும் என்கிறார்கள் எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீசாரின் அனுமதியை பெற தவெக நிர்வாகிகள் முயற்சி செய்வார்கள் என்கிறார்கள். பொதுக் கூட்டங்களை எப்படி நடத்துவது? எவ்வளவு நேரம் நடத்துவது? இடங்களை எப்படி தேர்வு செய்வது? மற்றும் காவல்துறையிடம் அனுமதி பெறுவது குறித்த எல்லாவற்றையும் ஆலோசிக்க விரைவில் பனையூர் அலுவலகத்தில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்கிறார்கள். அதில் விஜயின் பயணத்திட்டம் குறித்து இறுதி முடிவு செய்யப்படும் என சொல்லப்படுகிறது.
