Connect with us
tvkvijay

Cinema News

TVK Vijay: சம்பவம் நடந்த அன்று கரூரில் இருக்க நினைத்த விஜய்… திடீரென கிளம்பியதற்கும் இதான் காரணமா?

TVK Vijay: கரூர் தவெக கட்சி கூட்டத்தின் போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து இருக்கும் நிலையில் அங்கு ஏன் விஜய் இல்லை என்ற கேள்விக்கு சில தகவல்கள் கசிந்து இருக்கிறது. 

தவெக கட்சியின் தமிழக சுற்றுப்பயணம் கடந்த ஒரு மாதமாகவே கவனம் ஈர்த்து வருகிறது. சனிக்கிழமை தோறும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் விஜய் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் கசிந்த உடனே பலருக்கும் அதுகுறித்த பேச்சாக இருந்தது. 

ஒவ்வொரு வாரமும் விஜயின் பேச்சு முதல் கூடிய கூட்டம் வரை பலரையும் கவனிக்க வைத்தது. இருந்தும் தமிழக அரசு தவெக கூட்டத்துக்கு கொடுக்கப்பட்ட இடங்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியது. ஒவ்வொரு முறையும் தவெக கேட்கப்பட்ட இடத்தை கொடுக்காமல் வேறு இடம் கொடுத்து வந்தனர். 

அந்த வகையில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கூடும் கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேரே நெருங்கி நிற்கும் அளவுக்கான கூட்டம் என்பதால் பல முறை ரசிகர்களால் அங்கு சுலபமாக நிற்க முடியாத நிலை இருந்தது. கடந்த வார கூட்டத்திலே விஜய் இதை சுட்டிக்காட்டி இருந்தார்.

இந்நிலையில் கரூர் கூட்டம் இந்த வாரம் நடந்தது. ஆனால் விஜய் காலை கிளம்பியதில் இருந்தே நிறைய பிரச்னை இருந்தது. 11 மணிக்கு நாமக்கலில் பேச வேண்டியவர் வந்ததே 2 மணிக்குதான் என்பது கொந்தளிப்பை கொடுத்தது. 

தொடர்ந்து மாலை வர வேண்டியவர் கரூரில் நைட் 7 மணிக்கு பேசிவிட்டு சென்ற சில நொடிகளில் பலர் மயக்கம் போட்டு மருத்துவமனைக்கு அவசரமாக எடுத்து சென்றதாக தகவல்கள் கசிந்தது. அடுத்த சில நிமிடங்களில் பலர் இறந்து விட்டதாக அதிர்ச்சி தகவல்களும் வந்தது. 

திமுக நிர்வாகிகள் முதல் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உடனடியாக மருத்துவமனை விரைந்தனர். ஆனால் கட்சி தலைவரான தவெக தலைவர் விஜய் உடனடியாக தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். இது பலரிடமும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. 

tvk vijay
tvk vijay

செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கும் அவர் தரப்பு எந்த வித விளக்கமும் கொடுக்கவே இல்லை. இந்நிலையில் அன்று இரவு விஜய் மருத்துவமனை செல்ல விருப்பம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் முக்கிய அதிகாரிகள் விஜயை உடனே விரைந்து கிளம்ப சொல்லி இருக்கின்றனர். 

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே மக்கள் கொதித்து போய் இருப்பதால் விஜய் மருத்துவமனை வந்தால் அவர் உயிருக்கே ஆபத்தாகவும் அமையலாம் எனவும் சொல்லி இருக்கின்றனர். இருந்தும் அன்று இரவு வெளியில் தங்க யோசித்த முடிவையும் தவெக நிர்வாகிகள் வேண்டாம் என அவரை அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top