
Cinema News
தேதி குறிச்சாச்சி!.. மக்களை தேடி வரும் விஜய்!.. அவர் சொன்ன மாறி சிங்கம் வெளிய வருதா?..
Vijay Tvk: நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகி விட்டார். சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்தபோது அதை விட்டுவிட்டு அரசியலுக்கு சென்று விட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறிவிட்டார் விஜய். அதோடு இதுவரை அக்கட்சியின் சார்பாக இரண்டு மாநாடுகளையும் நடத்திக் காட்டி இருக்கிறார்.
விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாட்டில் 8 லட்சம் பேர் வரை கலந்து கொண்ட நிலையில் சமீபத்தில் மதுரையில் நடந்த மாநாட்டில் 10 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த மாநாட்டில் விஜய் பேசியது திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பலருக்கும் கோபத்தை ஏற்படுத்த அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
குறிப்பாக முதல்வரை ‘அங்கிள்’ என்று சொன்னது சர்ச்சைக்கு உள்ளானது. ஒருபக்கம் விஜய் மக்களை சந்திக்க வருவதில்லை, எப்போதும் பனையூரிலேயே இருக்கிறார்.. பாதிக்கப்பட்ட மக்களை கூட அங்கேயே வரவழைத்து சந்திக்கிறார் என்கிற விமர்சனம் அவர் மீது இருக்கிறது.

ஆனால் அவரோ ‘நான் வந்தால் கூட்டம் கூடி விடும்.. ரசிகர்கள் என்னை பார்க்க வருவார்கள்.. அதனால் நான் எதற்காக சென்றனோ அதை செய்ய முடியாது.. அதனால்தான் பனையூரில் வரவழைத்து பார்க்கிறேன்’ என விளக்கம் சொன்னார். ஆனால் அதை யாரும் ஏற்கவில்லை. ஒரு அரசியல்வாதி இப்படி சொல்லலாமா? மக்களை சந்திக்காமல் எப்படி அரசியல் செய்ய முடியும் என அரசியல் விமர்சகர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில்தான் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தமிழ்நாட்டு மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறார் விஜய். தமிழ்நாட்டில் உள்ள எல்லா தொகுதிகளுக்கும் சென்று அவர் மக்கள் பிரச்சனை பற்றி பேசப்போகிறாராம். செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாள் வருகிறது. திமுக கட்சிக்கு அடித்தளம் இட்டவர் அண்ணா. எனவே அவரின் பிறந்தநாளில் மக்களை சந்திக்க துவங்குவது திமுகவின் வாக்கு வங்கியை உடைக்க விஜய் எடுக்கும் வியூகம் என பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மக்களிடம் விஜயின் செல்வாக்கும் அதிகரிக்கும் எனவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மாநாட்டில் பேசிய விஜய் ‘சிங்கம் வேட்டைக்குதான் வெளியே வரும்.. வேடிக்கை பார்க்க வெளியே வராது’ என பேசி இருந்தது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில்தான் வெளியே வருகிறார் விஜய்.