Connect with us
tvk vijay

Cinema News

என்ன பெரிய பணம்.. மக்களுக்காக எதை வேணாலும் தூக்கி எறிவேன்.. அரியலூரில் விஜய் அசால்ட் பேச்சு

சினிமாவில் உச்சம் தொட்ட விஜய் தற்போது அரசியலில் களம் கண்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை என்ற கட்சியை ஆரம்பித்து தற்போது 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முனைப்போடு செயல்பட்டு வருகிறார். அதனால் இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் தற்போது நடித்து முடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் தான் என்னுடைய கடைசி படம் என்றும் அறிவித்துள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொடர்ந்து விஜய் அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். நேற்று திருச்சியில் தனது முதல் தேர்தல் பரப்புரையை துவங்கினார். இதில் தன்னை கடுமையாக விமர்சனம் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதில் விஜய் பணத்துக்காக தான் அரசியல் வருகிறார் என்று பல விமர்சனங்கள் இவர் மீது எழுந்தது.

இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அரியலூரில் அனல் பறக்க பேசினார், அதில் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி என்பது யார்? அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இனியும் நம்மளை என்ன செய்யப் போகிறார்கள்? இங்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? என அங்குள்ள குற்றங்களை எடுத்துக் கூறியுள்ளார். இங்கு பல தொழில் துறைகள் இருக்கிறது அதையெல்லாம் மேம்படுத்த அவர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வியும் முன் வைத்தார்.

அது மட்டும் இல்லாமல் தமிழக வெற்றிக் கழகம் வந்தால் நாங்கள் என்னென்ன செய்வோம் என்று கூறியுள்ளார். அவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் மக்களுக்காக அவர்களின் அன்புக்காக எவ்வளவு பெரிய பணமாக இருந்தாலும் தூக்கி எறியலாம். பணம் என் வாழ்க்கையில் போதும் போதும் என்ற அளவிற்கு பார்த்தாச்சு. நான் அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்று ஆணித்தனமாக பேசியுள்ளார்.

அதேபோல மதுரை மாநாட்டில் ஆளுங்கட்சியை மரியாதை குறைவாக பேசியதாக குற்றம் சாட்டினார்கள். அவ்வாறு நான் பேசவே இல்லை. ஆனால் அதை அப்படியே எனக்கு எதிராக மாற்றி விட்டார்கள் என்று கூறினார். அதேபோல திமுக உங்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று மக்களிடம் கேட்கும்போது அவர்கள் ஒன்று சேர்ந்து ஒன்றுமே செய்யவில்லை என்று சத்தமாக கூறினார்கள் உடனே விஜய் கேட்டுச்சா சி.எம் சார் என்று கூறினார். கிரவுண்டுக்கு வரவில்லை என்று விஜயை விமர்சித்தவர்களுக்கு இந்த முறை களத்திற்கு வந்து தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Continue Reading

More in Cinema News

To Top