மே 4ம் தேதி ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க ஸ்டாலின் சார்!.. தெறிக்கவிட்ட விஜய்!…
திமுகவை திட்டுவதற்காகவே, திமுகவை ஆட்சியிலிருந்து விரட்டுவதற்காகவே அரசியலுக்கு வந்தது போல் விஜய் தொடர்ந்து பேசி வருகிறார். அவர் எப்போது தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கினாரோ அப்போது முதலே திமுகவை மட்டுமே விமர்சனம் செய்து வருகிறார் விஜய்.
அதிலும் கரூர் சம்பவத்திற்கு பின் திமுகவின் மீதான விமர்சனம் மிகவும் கடுமையாக மாறிவிட்டது. ஏனெனில், கரூர் சம்பவதிற்கு பின் அரசியல் சதி இருக்கிறது என தொடர்ந்து விஜய் பேசி வருகிறார்.
இந்நிலையில், இன்று சென்னை நந்தனம் பகுதியில் பிரச்சாரம் செய்த விஜய் ‘நாங்கள் இதிலெல்லாம் அரசியல் செய்ய மாட்டோம் என்று சொல்லிவிட்டு கரூர் சம்பவத்திற்கு நான் தாமதமாக வந்ததே காரணம் என சட்டசபையில் சொன்னார் ஸ்டாலின் சார். நான் நாமக்கல்லில் இருந்து கரூருக்கு எப்படி சென்றேன் என்று உங்களுக்கு தெரியுமா? செல்லும் வழியில் காத்திருந்த மக்களை தவிர்த்துவிட்டு நான் செல்ல முடியுமா? உங்கள் மீது தவறே இல்லை என்றால் ஏன் செந்தில் பாலாஜியை கரூரில் நிற்க வைக்காமல் கோவைக்கு அனுப்பினீர்கள்?’ என்று விஜய் கேள்வி எழுப்பினார்..
மேலும், தேர்தல் முடிவு வெளியாகும் மே 4ம் தேதி மிகவும் சிறப்பான நாள் என ஸ்டாலின் சொல்லியிருக்கார். ஆமாம், அன்று ஸ்பெஷலான நாள்தான்.. அன்றுதான் அக்னி நட்சத்திரம் தொடங்கும் நாள்.. கத்திரி வெயில் மண்டையை பொளக்கும்.. அந்த வெயில் மக்களுக்காகவே ஆகாது.. எப்படா இந்த சூரியன் மறையும்? எப்படா இந்த சூரியன் ஒழியும்? என்று எல்லோரும் சூரியனை வெறுத்து ஒதுக்கும் நாள்.. அதுதான் இந்த தேர்தல் முடிவுகள் அறிகுறி’ என விஜய் பேசியிருக்கிறார்..
