Vijay TVK: இனிமே ஒன் மேன் ஆர்மி!.. கரூர் சம்பவத்தால் விஜய் எடுத்த அதிரடி முடிவு!…
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அங்கு நடந்த அசம்பாவிதமான சம்பவம் அவரை மனரீதியாக பாதித்திருக்கிறது. கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் வரை உயிரிழந்த சம்பவம் அவரையும், கரூர் சம்பவம் தொடர்பாக எழுந்துள்ள புகார்களும், விமர்சனங்களும் தவெக நிர்வாகிகளையும் செயல்படவிடாமல் முடக்கி இருக்கிறது.
விஜய் கடந்த ஒரு வார காலமாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார். அவர் வெளியிட்ட வீடியோவில் கூட எந்த விளக்கத்தையும் கொடுக்காமல், யார் மீதும் புகார் சொல்லாமல், மீண்டும் ஆளுங்கட்சியை குறை சொல்லி இருக்கிறார். ‘இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என மக்களுக்கு தெரியும். உண்மை வெளியே வரும். சிஎம் சார்.. என்னை பழி வாங்க நினைத்தால் என்னை எது வேண்டுமானாலும் செய்யுங்கள்.. ஆனால் என் கட்சி நிர்வாகிகளை ஒன்றும் செய்ய வேண்டாம் என பேசியிருந்தார்.
இதையடுத்து ‘இப்போதும் விஜய் தனது தவறை உணரவில்லை. கரூர் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்காததோடு அதற்கு பொறுப்பேற்கவும் இல்லை. மீண்டும் விஜய் ரசிகர்களை தமிழக அரசுக்கு எதிராக திருப்பி விடுவது போல பேசியிருக்கிறார். சினிமாவில் நடித்து, வசனம் பேசி பழக்கப்பட்டவர் தற்போது அரசியலிலும் ஒரு நடிகன் போலவே நடந்து கொள்கிறார்’ என பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
கரூர் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு தவெக நிர்வாகிகள் 3 பேரை போலீசார் கைது செய்திருக்கிறது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸி ஆனந்த் தலைமுறைவான நிலையில் அவரை கண்டுபிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனந்தின் முன்ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். அங்கு அவருக்கு முன் ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் விஜய்க்கு நெருக்கமான ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசி வருவதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் புதிய முடிவுகளை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது கட்சியின் உள் கட்டமைப்பை அவர் மாற்றியமைக்க திட்டமிட்டுருக்கிறாராம். அவரின் நம்பிக்கைக்கு உரிய நெருங்கிய நண்பர்களையும், ரசிகர் மன்ற தலைவர்களையும் 2ம் கட்ட தலைவராக நியமிக்க அவர் முடிவெடுத்திருக்கிறாராம்.
மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தோடு விரைவில் வீடியோ கால் மூலம் பேசவும் அவர் திட்டமிட்டுருக்கிறாராம். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் புஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ஜான் ஆரோக்கிய சாமி என யாரும் இல்லாமல் அனைத்து கட்சி நடவடிக்கைகளையும் விஜய் தனியாகவே கையாண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து ‘விஜய் தன்னிச்சையாக முடிவெடுக்க துவங்கி விட்டார். அது அவரின் அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது. ஏனெனில் மற்றவர் பேச்சுகளை கேட்டுததுதான் கரூர் சம்பத்திற்கு காரணமாக அமைந்தது’ என பலரும் பலரும் சமூக வலைதளங்களில் சொல்ல துவங்கி விட்டனர்.
