×

இளம் இயக்குநருக்கு இரட்டை குழந்தை... மகிழ்ச்சியில் குடும்பம்!

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் மக்களை பயப்படுத்தும் விதமாகவும் கலங்க வைக்கும் விதமாகவும் பல செய்திகள் உலா வருகின்றன. 

 

அதே சமயம் சில செய்திகள் உற்சாகம் அளிக்கும் வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் இளம் இயக்குனர் ஒருவர் தந்தையாகி உள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

துல்கர் சல்மான் நடிக்கும் 'வான்' தமிழ் படத்தின் இயக்குனர் ரா.கார்த்திக் தான் இந்த செய்திக்கு சொந்தக்காரர். அதுவும் ஒரு குழந்தை இல்லை இரட்டையர்களை அவர் பெற்றெடுத்துள்ளார். அதில் ஒருவர் ஆண் என்றும் மற்றொரு குழந்தை பெண் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவரது முதல் படமான இது கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் துல்கர் சல்மானுடன், கல்யாணி பிரியதர்ஷினி நடிக்கிறார்.இந்த செய்தியை பகிர்ந்த அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News