×

மாஸ்டர் லீக்கிற்கு காரணம் இவர் தான்.. பிடித்து கொடுத்த ட்விட்டர்..

மாஸ்டர் படத்தின் ஒரு மணி நேரக் காட்சிகள் லீக்கான நிலையில், அதை செய்த நபரை ட்விட்டர் தளம் பிடித்து கொடுத்திருக்கிறது. 
 

பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தில் தளபதி விஜய் நடிக்க அவருக்கு ஜோடியாக மாளவிகாவும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கொரோனா காலத்தில் படத்தை வெளியிட முடியாமல் படக்குழு பெரிதாக திணறியது. இதை தொடர்ந்து, தியேட்டர்கள் திறக்கப்பட்டது. அதையடுத்து, பொங்கல் தினத்தில் படத்தை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்தது. 

தொடர்ந்து, மாஸ்டர் பல சிக்கலை சந்தித்து வருகிறது. அதன் ஒரு படியாக, நேற்று இணையத்தளத்தில் மாஸ்டரின் ஒரு மணி நேர காட்சிகள் சிறிது சிறிதாக லீக்கானது. இது கோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விஜய் படத்திற்கே இந்த நிலமையா என தொடர் கேள்விகள் எழுந்தது. #WeStandWithMaster என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்ட்டாகியது. 

இந்த லீக் எப்படி நடந்தது எனப் படக்குழு ஆராய்ச்சியில் இறங்கியது. வெளிநாடுகளுக்கு படத்தின் டிஜிட்டல் காப்பியை அனுப்ப ஒரு கம்பெனியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு வேலை செய்யும் ஒருவரே காப்பியை திருடி, இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இவரை ட்விட்டர் இணையத்தளம் கண்டுபிடித்துள்ளது. அவர் மீது மாஸ்டர் தயாரிப்பு நிறுவனம் முறையாக புகாரளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 
 

From around the web

Trending Videos

Tamilnadu News