×

ஏரியில் மீன் பிடித்த நடிகர்கள் இருவருக்கு அபராதம் - வனத்துறை அதிரடி

கொடைக்கானல் ஏரியில் தடையை மீறி மீன் பிடித்த நடிகர் சூரி மற்றும் விமலுக்கு அபராதம்.

 

 ஊரடங்கு காரணமாக 3 மாதங்களுக்கு  கொடைக்கானல் பேரிஜன் ஏரியில் சுற்றுலாப் பயணிகளுகுத் தடைவிதிகப்படுள்ளது. இந்த தடைகளை மீறி  நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகியோர் அங்குள்ள பேரிஜன் ஏரியில் மீன் பிடித்துள்ளனர்.

அந்தப் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானதை தொடர்ந்து கடந்த 17-ம் தேதி இருவரும் அங்கு மீன் பிடித்துள்ளது உறுதியானது. இதையடுத்து கொடைக்கானல் வனத்துறை நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகியோருக்கு தலா ரூ2.000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News