×

இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – பெற்ற தந்தையின் கொடூரச் செயல் !

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த தந்தை ஒருவர் தன் இரு மகள்களுக்கும் பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த தந்தை ஒருவர் தன் இரு மகள்களுக்கும் பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்குத் திருமணம் ஆகி 7 வயதில் ஒரு மகளும் 5 வயதில் இன்னொரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மாரிமுத்துவின் மனைவி தினமும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம்போல மாரிமுத்துவின் மனைவி வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது குழந்தைகள் இருவரும் அழுதபடி இருந்தனர். இதையடுத்து அவர்கள் அழுகைக்குக் காரணம் அவர்களது தந்தை மாரிமுத்துதான் எனத் தெரிந்துள்ளது. மாரிமுத்து தான் பெற்ற குழந்தைகளுக்கே பாலியல் தொல்லைக் கொடுத்ததை அறிந்த அவரின் மனைவி போலீஸில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலிஸார் அவரைப் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News