மஞ்சணத்தி படத்தின் நாயகிகள் - ரெண்டு பேருமே மாஸ் பண்ணிடுவாங்க!

 
manjanathi film

மாரி செல்வராஜ்: 

தமிழ் சினிமாவில் முத்தான திரைப்படங்களை இயக்கி தொடர் வெற்றி கொடுத்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கி தொடர்ந்து கர்ணன், மாமன்னன், வாழை, பைசன், காளமாடன் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

manjanathi movie

தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை தன் படங்களுக்காக பிடித்து வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த நிலையில் அவரின் 6-வது திரைப்படமாக மஞ்சணத்தி என்கிற புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார். இது திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைப்பாளராக இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது .

மஞ்சணத்தி திரைப்படம்: 

முதல் முறையாக மாரி செல்வராஜ் மற்றும் இளையராஜா கூட்டணி அமைந்திருப்பதால் ரசிகர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்த நிலையில் மஞ்சணத்தி படத்தில் ஹீரோயின்கள் யார் என்பதை குறித்த கேள்வி எழுந்து வந்த நிலையில் தற்போது இரண்டு ஹீரோயின் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள் .

manjanathi

இரண்டு ஹீரோயின்கள்:

அதில் பிரியங்கா மோகன் மற்றும்  கயாடு லோஹரின் இணைந்திருக்கிறார்கள். இது குறித்து பிரியங்கா மோகன் சமூக வலைதள பக்கத்தில்... நான் நீண்ட நாட்களாக அறிவிக்க காத்திருந்த செய்தி இது. இத்தகைய சிறந்த கூட்டணி இணைந்ததில் பெருமிதம் கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார் .

மேலும் நடிகை கயாடு லோஹரின் கூறுகையில்...  ஒரு கனவு திட்டம் இப்படித்தான் இருக்கும். இறுதியாக என்னுடைய கனவு நனவாகிறது. ஒவ்வொரு கணமும் உச்சத்தை தொடும் கூட்டணி இது என பதிவிட்டிருக்கிறார். இதனால் படத்தின் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Tags

From Around the web