×

தளபதி 65ல் பூஜா ஹெக்டே மட்டுமல்ல... இன்னொரு முன்னணி நடிகை? 

தளபதி 65 படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
 
தளபதி 65ல் பூஜா ஹெக்டே மட்டுமல்ல... இன்னொரு முன்னணி நடிகை?

மாஸ்டர் பெருவெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான வேலைகளை விஜய் உடனே தொடங்கிவிட்டார். தளபதி 65 எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தை `கோலமாவு கோகிலா’, `டாக்டர்’ படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கிறது. ப்ரி புரடக்‌ஷன் வேலைகள் வேகமெடுத்திருக்கும் நிலையில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களையும் இறுதி செய்யும் பணியில் தயாரிப்பு மற்றும் இயக்குனர் தரப்பு பிஸியாகியிருக்கிறது. 

சமீபத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி இருக்கிறார். அவருக்கு பெத்த சம்பளமாக 3.4 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில், பூஜா ஹெக்டே மட்டும் 65 படத்தின் நாயகி இல்லையாம். படத்தில் இரண்டு நாயகிகள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ராஷ்மிகா மந்தனா நடிக்க வேண்டும் என விரும்பிய ரசிகர்கள் இந்த தகவலால் செம ஹேப்பி மூடிற்கு சென்றுள்ளார்கள். ஆனால், யார் அந்த இரண்டாவது நாயகியாக இருக்கும் என பேச்சுகள் கிளம்பி இருக்கிறது. விரைவில் அந்த நடிகை குறித்த அறிவிப்பும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News