×

சூரரை போற்று  படத்திற்கு "U' சான்றிதழ் - சூர்யாவின் கதாபாத்திரம் இது தான்...!

சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென சூர்யா ரசிகர்களுக்கு அடுக்கடுக்கான அப்டேட் வந்திறங்கியுள்ளது. ஆம்,  சூரரை போற்று  படத்தின் சென்சார் சத்தமேயில்லமல் முடிந்துள்ளது.  படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கூறுகிறது.

 

மேலும் தியேட்டர்கள் திறக்கப்பட்ட உடனே சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்துடன் சூர்யா இப்படத்தில் விமான சேவை நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் கேரக்டரில் நடித்துள்ளாராம். சூரரை போற்று உங்களுடன் உயரமாக பறக்கவுள்ளது.  "Our Maara is ready for action" என 2D எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் ரசிகர்களை அலார்ட் செய்துள்ளது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'சூரரை போற்று'. விமானி  ஒருவரின் உண்மை கதையை தழுவி எடுக்கப்படும் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுக்கடுக்கான இந்த அப்டேட் சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News