கெனிஷாவிற்கு தண்டனை வழங்கிய அமீரக நீதிமன்றம் - நடந்தது என்ன?
ரவி மோகன் - கெனிஷா:
சர்ச்சைக்குரிய பெண் பிரபலமாக பார்க்கப்பட்டு வருபவர் தான் பாடகி கெனிஷா. இவர் பிரபல நடிகரான ரவி மோகனுடன் ரகசிய உறவில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரவி மோகனுக்கு மனைவியுடன்
பிரச்சனை ஏற்பட்ட சமயத்தில் அவருக்கு ஆறுதலாக பேசி பின்னர் அவரையே காதலித்து மனைவியிடம் இருந்து பிரித்து சென்று விட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இச்சம்பவத்தால் கெனிஷா மிகப்பெரிய அளவில் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் மனைவியை பிரிந்த ஜெயம் ரவி கெனிஷாவுடன் லிவிங் லைஃப் வாழ்ந்து வந்தார். இது ரவி மோகனின் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தி ஏற்படுத்தியதோடு கெனிஷா மீது வன்பத்தை கொட்டி வந்தார்கள் .
பிரிந்து சென்ற கெனிஷா:
இப்படியான சமயத்தில் சமீபத்தில் நடிகர் ரவி மோகன் தன்னுடைய காதலி தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும் மனைவி மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்திருந்தார் .
இந்த விஷயம் பூதாகரமாக வெடிக்க துவங்கியது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் கிடைத்திருக்கிறது. அதாவது பாடகி கெனிஷா மீது அமீரக நீதிமன்றம் தண்டனையுடன் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது குறித்து என்ன நடந்தது என்று பார்த்தீர்களானால்...

கெனிஷாவிற்கு தண்டனை:
அமீரகத்தில் நிகழ்வு நடத்தும் மேலாண்மையாளர் பெண்ணை பற்றி தகாத வார்த்தைகளை பேசி இழிவுபடுத்தியதற்காக போடப்பட்ட வழக்கில் பாடகி கெனிஷாவிற்கு அமீரக நீதிமன்றம் தண்டனையுடன் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
ஏழை, பணக்கார வித்தியாசம் இல்லாமல் அமீரக நீதிமன்றம் வழங்கி இருக்கும் இது தீர்ப்பை தமிழக மக்கள் பெரும் வியப்புடன் பார்க்கிறார்கள். ஜெயம் ரவியுடன் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்திருக்கும் இந்த சமயத்தில் கெனிஷா மீது தண்டனை வழங்கியிருப்பது மேலும் இச்சம்பவத்தை பரபரப்பான விஷயமாக மாற்றி இருக்கிறது.
