Categories: Cinema News latest news

“மாடு மேய்க்கனுமா? அதுக்கு என்னோட தம்பி இருக்கான்..” …. அருள்நிதி வாழ்க்கையை புரட்டிப்போட்ட உதயநிதி

அருள்நிதி என்ற வார்த்தையை கேள்விப்பட்டாலே “த்ரில்லர்” என்ற வார்த்தையும் நியாபகம் வரும். அந்த அளவுக்கு த்ரில்லர் படங்களாக நடித்து தள்ளிக்கொண்டிருக்கிறார் உதயநிதி. தன் கேரியரின் தொடக்கத்தில் இருந்தே பல வித்தியாசமான ரோலில் நடித்து வரும் அருள்நிதி, தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான திரைப்படம் “வம்சம்”.

கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். அருள்நிதியுடன் சுனைனா, கிஷோர், ஜெயப்பிரகாஷ், கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருந்தனர். தனது முதல் திரைப்படத்திலேயே மறக்க முடியாத வெற்றியை கொடுத்தார் அருள்நிதி.

ஒரு பக்காவான கிராமத்து பையனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.  இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி “வம்சம்” திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

அதாவது “வம்சம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் எனக்கு தான் வந்தது. ஆனால் இயக்குனர் கிராமத்து சப்ஜெக்ட், லுங்கி கட்டிக்கொண்டு, தாடி வைத்துக்கொண்டு மாடு மேய்ப்பது போன்ற காட்சிகள் இடம்பெறும் என கூறினார். உடனே நான் என்னால் அவ்வளவு கஷ்டப்பட முடியாது. அதற்கு என்னுடைய தம்பி அருள்ன்னு ஒருத்தன் இருக்கான், அவன் கிட்டப்போய் கேளுங்க” என கூறிவிட்டாராம்.

உதயநிதியின் இந்த ஒரு வார்த்தை தான் அருள்நிதி வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தையே தந்துள்ளது. தற்போது அருள்நிதி தமிழின் தனித்துவமான நடிகராக திகழ்கிறார் என்றால் அதற்கு ஒரு விதத்தில் உதயநிதியும் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.

Arun Prasad
Published by
Arun Prasad