Connect with us

Cinema News

நண்பேன்டாவுக்கு ஆப்பு வச்ச சந்தானம்!.. ஆனாலும் ரகசியமா உதவும் உதயநிதி ஸ்டாலின்.. எப்படி தெரியுமா?..

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்த பல படங்களில் அவரது படங்களை ஓட வைத்தவர் சந்தானம். ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேன்டா, சரவணன் இருக்க பயமேன் என பல படங்களில் இருவரும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் எல்லாமே வேறலெவலில் ஹிட் அடித்துள்ளன.

ஆனால், ஹீரோவான பின்னர் சந்தானம் உதயநிதி ஸ்டாலின் படங்களில் நடிப்பதில்லை. இந்நிலையில், சமீபத்தில் சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த படத்தின் டீசரில் இடம்பெற்ற ஒரே ஒரு வசனம் இரு நண்பர்களுக்கு இடையே பிரிவை ஏற்படுத்தி விட்டதாக கூறினர்.

இதையும் படிங்க: சிவாஜிக்கு இயக்குனர்கள் வைத்த சவால்!. அசால்ட் பண்ணி தூக்கி சாப்பிட்ட நடிகர் திலகம்…

சாமியே இல்லைன்னு சொல்லிட்டு ஊருக்குள்ள ஒரு ராமசாமி திரிஞ்சானே அந்த ராமசாமியா என தெளிவாக பெரியாரை இழிவுப்படுத்துவது போல ஒருவர் கேட்க, நான் அந்த ராமசாமி இல்லை என சந்தானம் சங்கித்தனமாக பேசும் காட்சி இடம்பெற்ற நிலையில், திமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ரெட் ஜெயண்ட் நிறுவனம் சந்தானத்தின் படத்தை இனிமேல் வெளியிடாது என அதில் இருந்து ஒதுங்கி விட்டதாக அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் போது தெரிய வந்த நிலையில், அதெல்லாம் சுத்த பித்தலாட்டம் பாஸ் ரெட் ஜெயண்ட் ஒதுங்கினாலும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தை ரிலீஸ் பண்றது யாருன்னா உதயநிதி ஸ்டாலினின் பினாமி தான் என சவுக்கு சங்கர் ஒரு ட்வீட் போட்டு சோலியை முடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: என்ன கண்ட்ராவி டிரெஸ்டா இது!.. கிளாமர் காட்டுறேன்னு ட்ரோலில் சிக்கிய ஸ்ருதி!..

என்ன இருந்தாலும் உதயநிதி ஸ்டாலினுக்கு சந்தானம் மீதுள்ள பாசம் குறையலையே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு கண்ட மேனிக்கு பதிவுகளை போட்டு வருகின்றனர்.

 

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top