
latest news
படம் செம மாஸ்!.. டீமுக்கு வாழ்த்துக்கள்!.. கூலி படத்துக்கு ரிவ்யூ போட்ட உதயநிதி..
Coolie Review: நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் பயங்கர எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ரஜினியும் லோகேஷ் கனகராஜும் முதன் முறையாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா என பலரும் நடித்திருக்கிறார்கள். மேலும் பாலிவுட் நடிகர் அமீர்கானும் ஒரு கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் கேங்ஸ்டர் படம் எடுப்பவர். இந்த படமும் ஹார்பரில் தங்கம் கடத்தும் கேங்ஸ்டர் பற்றிய கதைதான். ஹார்பரில் கூலியாக இருக்கும் ரஜினி தங்க கடத்தலை எப்படி தடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

நாளை படம் வெளியாக உள்ள நிலையில் உலகம் முழுவதும் டிக்கெட் முன்பதிவு வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. முன்பதிவிலேயே கூலி படம் 100 கோடி வரை வசூலித்து விட்டதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் நாளை காலை 9 மணி முதல் இரவு 2 மணி முதல் 5 சிறப்பு காட்சிகளை திரையிட்டுக் கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் காலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியாகிறது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் நாளை இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட இருக்கிறது.
இந்நிலையில் நடிகரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்த சூப்பர்ஸ்டார் ரஜினி சார் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்த வரலாற்று தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன். நாளை வெளியாகும் அவருடைய கூலி திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் கவரும் Mass Enterntainer-ஆக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. கூலி மாபெரும் வெற்றி பெற படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுருக்கிறார்.