×

மன்னிப்பு கேட்க மாட்டேன்... இழிவாக பேசியும் வாய் சவடால் விடும் உதயநிதி ஸ்டாலின்...

 

திமுக தலைவர் ஸ்டாலினின் மகன், திமுக இளைஞரணி செயலாளரும் மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், அவர் தொடர்ந்து பல இடங்களிலும் தரம் தாழ்ந்து பேசி வருவதாக புகார் எழுந்துள்ளது.

சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிமுகவை அவர் கடுமையாகவும், ஏளனமாகவும் பேசி வருகிறார். 

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலாவை தொடர்புபடுத்தி மிகவும் அருவருக்கத்தக்க கருத்தை அவர் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. பல பெண்கள் அமைப்புகளும், பெண் அரசியல் பிரமுகர்களும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை கண்டித்து வருகின்றனர். மேலும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஆனால், விழுப்புரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘நான் கருணாநிதியின் பேரன். மன்னிப்பு கேட்க மாட்டேன். என் மீது வழக்கு வேண்டுமானால் போட்டுக்கொள்ளுங்கள்’ எனக்கூறினார். அவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  

4 புறமும் எதிர்ப்பு அதிகரித்ததால் தற்போது ‘ எனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் பெண்களை இழிவாக பேசமாட்டேன். ஆன் பேசியது காயப்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்’ என தற்போது பேசியுள்ளார். இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்பதை விட்டுவிட்டு வருத்தம் தெரிவிக்கிறேன் என்கிற பேச்சு பெண்கள் அமைப்பினருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, உதயநிதி மன்னிப்பு கேட்காவிட்டால் போரட்டத்தில் ஈடுபடுவோம், தமிழகத்தில் அவர் வேறும் எங்கும் பிரச்சாரம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News