×

அதிக இடங்களில் திமுகதான் போட்டியிடும் .. கூட்டணி கட்சிகளை மதிக்காத உதயநிதி... 
 

 

திமுக தலைவர் ஸ்டாலினின் மகன், திமுக இளைஞரணி செயலாளரும் மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், அவர் தொடர்ந்து பல இடங்களிலும் தரம் தாழ்ந்து பேசி வருவதாக புகார் எழுந்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிமுகவை அவர் கடுமையாகவும், ஏளனமாகவும் பேசி வருகிறார். 

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலாவை தொடர்புபடுத்தி மிகவும் அருவருக்கத்தக்க கருத்தை அவர் பேசினார்.  இது தொடர்பான வீடியோ ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பலரையும் முகம் சுழிக்க வைத்தது. பல பெண்கள் அமைப்புகளும், பெண் அரசியல் பிரமுகர்களும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை கண்டித்தனர். ஆனாலும், மன்னிப்பு கேட்க முடியாது என உதயநிதி திமிராக தெரிவித்தார்.

இந்நிலையில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வாய்ப்புள்ள இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க வேண்டாம் என தலைவர் ஸ்டாலினிடம் நான் கூறியிருக்கிறேன். குறிப்பாக மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட தொகுதிகளில் திமுக போட்டியிடும். தலைவர் சொல்வதற்கு முன்பே நான் சொல்கிறேன். அவரின் நான் பேசிக்கொள்கிறேன் என நேற்று பேசியுள்ளார்.

தேர்தல் நெருங்கும் போது கூட்டணி அமையும். கூட்டணி தொகுதிகளுக்கு எந்தெந்த தொகுதி ஒதுக்கப்படும் என்பது அப்போதுதான் முடிவு செய்யப்படும். அதுவும் கட்சி தலைவரே அந்த முடிவை எடுப்பார். ஆனால், திமுகவில் மூத்த தலைவர்கள் பலர் இருக்க, உதயநிதி இப்படி ஒரு கருத்தை பொது இடத்தில் பதிவு செய்துள்ளது திமுகவினரையே கோபம் கொள்ள செய்துள்ளது. அனுபவம் வாய்ந்த ஸ்டாலினுக்கு, அரசியலில் பெரிய அனுபவமே இல்லாத உதயநிதி அறிவுரை கூறுவதா என அவர்கள் சமூக வலைத்தளங்களில் பொங்கி வருகின்றனர்.

மேலும்,திமுக கூட்டணி கட்சிகள் உதயநிதி கிள்ளு கீரையாக கருதும் அளவுக்கு ஏளனமாக போய்விட்டதா என கேள்வி எழுந்துள்ளது.-
 

From around the web

Trending Videos

Tamilnadu News