×

நம்ப முடியலல... நான் இப்படி ஒல்லியானேன் - ரசிகர்ளுக்கு டிப்ஸ் கொடுத்த குஷ்பு

நடிகை குஷ்பு திடீரென உடல் எடையை பாதியாக குறைத்து 80ஸ் காலத்து குஷ்பு போல மாறி புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மேலும், இது ரஜினியுடன் நடிக்கும் அண்ணாத்த படத்திற்காக கெட்டப் என்றும் சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியானது.

 

இந்நிலையில் தற்போது மற்றொரு ஸ்லிம் லுக் போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டு , ''நல்ல உடற்பயிற்சி, நல்ல ரிசல்டை தருகிறது'' என பதிவிட்டுள்ளார். இது எப்படி நடந்தது ஆச்சர்யமா இருக்கிறது என்ற ரசிகர் ஒருவருக்கு " நல்ல ஒர்க் அவுட் பண்ணுங்க.. அப்புறம் சாப்பாட்டிற்கு நோ சொல்லிடுங்க இது இரண்டு தான் என்னுடைய மாற்றத்திற்கு காரணம் என டிப்ஸ் கொடுத்துள்ளார் .

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலத்து முன்னணி நடிகையான குஷ்பு ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் பல நட்சத்திர நாயகன்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் குஷ்புவும் நடிகர் பிரபுவும் காதலித்து இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததாகவும் கிசுகிசுக்கள் எழுந்தன.

ஆனால் சிவாஜி குடும்பத்தினர்களின் முயற்சியால் இந்த ஜோடி பிரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் குஷ்பு, இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அவந்திகா , அனந்திகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். தற்ப்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் குஷ்பு நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News