×

அற்புத நடிகர் ஆர்யாவின்
மறக்க முடியாத படங்கள் 

 
nk2
''இவரது நக்கல் கலந்த டயாலாக்கும் படத்தின் கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் திறனும் இவரது வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது. இந்த படத்தில் ஆர்யாவா நடித்துள்ளார். அப்படி என்றால் படம் பார்க்க செல்லலாம் என்ற ஒரு எண்ணத்தை உண்டாக்கி உள்ளார்.''

ஆர்யா தமிழ்சினிமாவின் இளம் நடிகர்களுள் ஒரு வித்தியாசமான நடிகர். இவருக்கு பிளஸ் பாயிண்டே இவரது கட்டுடல்தான். இவரது நக்கல் கலந்த டயாலாக்கும் படத்தின் கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் திறனும் இவரது வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது. இந்த படத்தில் ஆர்யாவா நடித்துள்ளார். அப்படி என்றால் படம் பார்க்க செல்லலாம் என்ற ஒரு எண்ணத்தை உண்டாக்கி உள்ளார். இவர் தயாரிப்பாளராகவும் உள்ளார். கிரிக்கெட்டில் ஆர்வமிக்கவர் என்பதால் தமிழ்சினிமா நடிகர்கள் சார்பில் நடக்கும் போட்டிகளில் கிரிக்கெட் விளையாடச் செல்வார்.

ஆரம்பத்தில் இவர் 2005ல் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் தான் அறிமுகமானார். இந்தப்படத்தில் நடித்ததற்காக சிறந்த புதுமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. 2009ல் வெளியான நான் கடவுள் படம் இவருக்கு ஒரு பெரிய பிரேக்கைக் கொடுத்தது. அஜீத்குமாருடன் ஆரம்பம் படத்திலும், விஷாலுடன் அவன் இவன் படத்திலும் நடித்து மேலும் பிரபலமானார். ஓரம்போ, இரண்டாம் உலகம், சேட்டை, மதராசப்பட்டினம், சிக்குபுக்கு உள்பட 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், சாயிஷாவிற்கும் 2019ல் திருமணம் நடந்தது. 
இவர் நடிப்பில் பல படங்கள் பெயர் சொல்லும் வகையில் உள்ளது.  அனைவரும் விரும்பும் வகையில் உள்ள குறிப்பிட்ட சில படங்களை இங்கு பார்க்கலாம். 

நான் கடவுள், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், ராஜா ராணி, கடம்பன்  

நான் கடவுள்


2009ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். பாலா இயக்கத்தில் ஆர்யா, பூஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகன் வசனத்தை எழுதியுள்ளார். அவரது ஏழாவது உலகம் எனும் புதினத்தைத் தழுவி திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ளார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு அபாரமாக இருக்கும். சூப்பர் சுப்பராயன் சண்டை அமைத்துள்ளார். படத்தில் ஆர்யா அகோரியாகவே மாறியிருப்பார். அவர் தலைகீழாக நின்று கொண்டு பாடல் பாடி தவம் செய்வது படத்தின் முத்தாய்ப்பான காட்சி. படத்தில் சண்டைக்காட்சிகள் அற்புதம். 

இளையராஜாவின் மிரட்டலான இசை படத்திற்கு பிளஸ் பாயிண்ட். கதை எழுதி இயக்கியிருக்கிறார் பாலா. இவரது படங்கள் என்றாலே பார்க்க வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் உண்டு. படத்தின் காட்சி அவருக்கு பிடித்தவாறு வரும் வரை நடிகர்களை பாடாய்படுத்தி விடுவார் என்று இவரைப் பற்றி பரவலான விமர்சனம் வரும். அது உண்மைதான் என்றாலும் அப்படி எடுக்கும் காட்சிகள்தான் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்கின்றன என்பதற்கு இவரது படங்களின் வெற்றியே சாட்சி. நான் கடவுள் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அத்தனையும் சினிமாவிற்காக நடித்தது போல் இருக்காது. ஒவ்வொன்றும் நிஜ கதாபாத்திரம் தான் என்றே எண்ணத் தோன்றும். அவ்வளவு அற்புதமாக படத்தை எடுத்திருப்பார் பாலா. ஊனமுற்றவர்களை பிச்சை எடுத்து பிழைக்கும் கும்பலைப் பற்றிய கதை இது. 

படம் பார்த்து விட்டு வெளியே வரும் ரசிகர்களுக்கு தமிழ்சினிமாவில் இப்படி ஒரு படமா...என்ன ஒரு மிரட்டல்...என்று எண்ணத் தோன்றும். படத்தில் வில்லனாக மொட்டை ராஜேந்திரன் மிரட்டு மிரட்டு என மிரட்டியிருப்பார்.

ஓம் சிவோஹம்..., கண்ணில் பார்வை, மாதா உன் கோவிலில், பிச்சைப்பாத்திரம், அம்மா உன் பிள்ளை, ஒரு காற்றில் பாடல்கள் படத்தில் மறக்க முடியாதவை. அதிலும் ஓம் சிவோஹம் பாடல் செமமாஸ்...ரகம். 

பாஸ் என்கிற பாஸ்கரன் 

பாஸ் என்கிற பாஸ்கரன் 2010ல் வெளிவந்த காதல் நகைச்சுவை திரைப்படம். சிவ மனசுல சக்தி திரைப்படத்தின் இயக்குனர் இராஜேஷின் இரண்டாவது திரைப்படம். இப்படத்தில் ஆர்யா, சந்தானம், நயன்தாரா, சந்தானம், ராஜேந்திரன், விஜயலெட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். ஆர்யா, கே.எஸ்.சீனிவாசனன் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படம் முழுக்க முழுக்க நகைச்சுவை காட்சிகள் நிறைந்து இருப்பதால் ரசிகர்கள் இப்படத்தை வெற்றிப்படமாக்கினர். படத்தில் சந்தானமும், ஆர்யாவும் இணைந்து நகைச்சுவைக் காட்சிகளை ரசிக்கும்படியாக நடித்து இருப்பார்கள்.

இப்படத்தில் சந்தானத்திற்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விஜய் விருது கிடைத்தது. இப்படத்தில் அட பாஸ் பாஸ்.., யார் இந்த பெண்தான், தத்தி தாவும் பேப்பர் நான், லைலே...லைலே...மாமா...மாமா பாடல்கள் சூப்பர். இப்படத்திற்கு காலேஜ் மாணவர்கள் கூட்டம் அதிகமாக சென்றது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆர்யாவிற்கெ ரசிகர்கள் கூட்டம் வந்தது. 

அவன் இவன் 

சேது பாலா இயக்கிய மற்றொரு படம் அவன் இவன். 2011ல் வெளியான இப்படத்தில் நண்பர் விஷாலுடன் இணைந்து ஆர்யா நடித்துள்ளார். உடன் புதுமுகங்கள் ஜனனி ஐயர் மற்றும் மது ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் ஆர்யாவும், விஷாலும் போட்டி போட்டுக் கொண்டு நடித்து அசத்தியுள்ளனர். விஷால் மாறு கண் உள்ளவராகவே மாறியிருப்பார். படம் முழுவதும் எப்படி இப்படி கண்ணை மாற்றி நடித்தார் என்று வியக்க வைக்கிறது. அதேபோல் ஆர்யாவும் படத்தில் செம கலாய் கலாய்த்திருப்பார். இவரது கேரக்டரின் பெயர் கும்பிடுறேன் சாமி. போலீசார் யோவ் ஒன் பேரச் சொல்லுய்யா...ன்னு சொல்ல கும்பிடுறேன் சாமி...என ஆர்யா சொல்ல திரும்ப திரும்ப அவர் பேரச் சொல்லுய்யா எனக் கேட்க...இவரும்; கும்பிடுறேன் சாமி என சொல்லி கடைசியாய் அதான்யா என் பேரு என சொல்லி அதகளப்படுத்தி விடுகிறார் ஆர்யா. படத்தில் விஷாலும், ஆர்யாவும் ஒருவரை ஒருவர் கலாய்க்கும் சீன்கள் செம தூள்.

படத்தின் கதை இதுதான்...

ஒரு தகப்பன், வெவ்வேறு தாய்கள் என்று எதிரும் புதிருமாய் இருக்கும் சகோதரர்களான வால்ட்டர் வணங்காமுடி ஜவிஷால், கும்புடுறேன்சாமி ஆர்யா. ஜமீன் தீர்த்தபதியாக வரும் ஹைனெஸ் ஜஜி.எம்.குமார். இவர்களுக்கு இடையில் நடக்கும் நகைச்சுவை திரைப்படம். இறுதியில் ஹைனஸ்ஸை அடிமாட்டு ஏலக்காரன் கொலை செய்து விடுகிறான். பழிவாங்கும் ஆக்ரோஷமான கதை. இயக்குனர் பாலாவின் மாறுபட்ட பாத்திர அமைப்புகளோடு விறுவிறுப்பாக செல்லும் கதை.
ராசாத்தி, டியா டியா டோல், ஒரு மலையோரம், முதல் முறை, அவனப்பத்தி பாடல்கள் அற்புதம். 

ராஜா ராணி

அட்லியின் இயக்கத்தில் வெளியான முதல் படம் இது. ஆர்யாவிற்கு பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. அட்லி இயக்குனர் ஷங்கருடன் எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். 

இப்படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நசீம், சத்யராஜ், சத்யன் உள்பட பலர் நடித்துள்ளனர். தெலுங்கு மொழியில் ராஜா ராணி என்ற பெயரிலேயே டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. படத்தில் ஜெய் அற்புதமாக நடித்திருப்பார். காட்சிக்கு காட்சி ரசிக்கும்படியாக நடித்து அசத்தியிருந்தார். 

படத்தின் கதை இதுதான்... 

காதல் தோல்வியோடு வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. ஒவ்வொரு காதலுக்குப் பிறகும் இன்னொரு காதல் இருக்கிறது. இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்பதை படம் அழுத்தமாக சொல்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் அற்புதம். ஏ பேபி..., சில்லென..., உன்னாலே... ஓடே ஓடே...இமையே இமையே, எ லவ் ஃபார் லைஃப் போன்ற பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. சிறந்த நடிகை நயன்தாரா, சிறந்த அறிமுக இயக்குனர் அட்லி, சிறந்த பின்னணி இசை ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோருக்கு எடிசன் விருதுகள் கிடைத்தன. நார்வே திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சிறந்த நடிகை நயன்தாராவுக்கும், சிறந்த துணை நடிகராக சத்யராஜூக்கும் பிலிம்பேர் விருதுகள் கிடைத்தது.

கடம்பன் 

கடம்பன் படத்தில் காட்டைக் காப்பாற்றத் துடிக்கும் ஒரு இளைஞனின் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருப்பார் ஆர்யா. இவர் காட்டிற்காக போராடும் ஆவேசம் படத்தில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். 
கடம்பன் 2017இல் வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். இயக்குநர் ராகாவா இதை எழுது இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியுடன் இணைந்து பி.சுரேஷ், பி.ஜீவன், ஜித்தன் ரமேஷ், ஜீவா (திரைப்பட நடிகர்), ஆர்யா ஆகியோரும் தயாரித்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில். ஆர்யா மற்றும் கேத்ரின் தெரசா ஆகிய இருவரும் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். ஜேம்ஸ்  கேமரன் இயக்கத்தில் 2009ல் வெளிவந்த அவதார் என்ற ஆங்கிலத் திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர்யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். ஒளிப்பதிவு செய்தவர் சதீஷ் குமார். மேலும் படத்தொகுப்பினை தேவாவும், கலை இயக்கத்தை ஏ. ஆர். மோகனும் சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயனும் மேற்கொண்டனர். இப்படம் தெலுங்கில் கஜேந்திரட என மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

கடம்பன் (ஆர்யா) தமிழ்நாட்டின் கடம்பன் வனத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்தவன். இப்பகுதி அதன் வனவிலங்குகளுக்கும், ஏராளமான சுண்ணக்கற்களுக்கு பெயர் பெற்றது. ஒரு பெரிய சிமென்ட் தொழிற்சாலை வைத்திருக்கும் மகேந்திரன் சகோதரர்கள் கவனத்தை இந்த இடம் ஈர்க்கிறது. பின்னர் அவர்கள் எளிதில் யாரையும் நம்பாத பழங்குடியினரை அந்தக் காட்டில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கின்றனர். அந்த வனத்தில் வசிக்கும் ரதி (காத்ரீன் திரீசா) என்றப் பெண் கடம்பனைக் காதலிக்கிறாள். கடம்பனுடன் தனது காதலைச் சொல்லி அவனது இதயத்தை வெல்ல தொடர்ந்து முயற்சிக்கிறாள். ரதியின் சகோதரனும் கடம்பனும் ஒருவருக்கொருவர் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றனர். பின்னர் மகேந்திரன் சகோதரர்கள் காட்டினை ஆக்கிரம்ப்பு செய்து தங்களது தொழிலை தொடங்கினார்களா என்பதும் கடம்பன் அவர்களை எவ்வாறு எதிர்க்கிறான் என்பதும், ரதியை கடம்பன் திருணம் செய்து கொண்டானா? என்பதையும் வெண்திரையில் காணலாம். 

From around the web

Trending Videos

Tamilnadu News