×

லாக்டவுனில் அடையாளமின்றி மாறிப்போன சேரன் - ஷாக்கிங் போட்டோ!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தவர் சேரன். முதலில் சில படங்கள் வெற்றி பெற்றாலும் அவரால் தொடர்ந்து நிலைக்க முடியவில்லை. இதன் காரணமாக நடிப்பு வாய்ப்பும் இல்லாமல் இயக்குனர் வாய்ப்பும் இல்லாமல் இருந்துவந்த அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. '

 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ஆக்டீவாக இருக்கும் சேரன் ட்விட்டரில் சமூகத்தில் நடக்கும் அவலங்களை குறித்து தொடர்ந்து தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது ட்விட்டரில் லாக்டவுனில் அடையாளமின்றி மீசையும்  தாடியுமாக மாறிப்போன போட்டோவை வெளியிட்டு,

"நீண்ட இடைவெளிக்கு பின் அலுவலகம் வந்து வேலை பார்க்க துவங்கியாச்சு... எவ்வளவு சுகமா இருக்கு.. இத்தனை நாள் முடங்கி கிடந்த நாம் இனி வெளிச்சத்தை நோக்கி நடக்கலாம்..  இது எனக்கு மட்டுமல்ல... எல்லோருக்குமானது. விரைவில் சகஜ நிலைக்கு திரும்புவோம் என நம்பி களத்தில் இறங்கலாம்." என்று கூறி நம்பிக்கை பதிவு செய்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News