Categories: Cinema News latest news

வெற்றிமாறனுக்கு இப்படி ஒரு குணம் இருக்கா?… சத்தியமா இதை நினைச்சிக்கூட பார்த்துருக்க மாட்டீங்க!

வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக வலம் வருகிறார். இவரது திரைப்படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கதாநாயகனாக நடித்துள்ள சூரியின் நடிப்பு மிகவும் அசரவைக்கும் அளவுக்கு இருந்ததாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

சூரி ஒரு நகைச்சுவை நடிகர் என்பதே பலரின் நினைவுக்கு வரவில்லையாம். அந்த அளவுக்கு அந்த கதாப்பாத்திரத்துடன் ஒன்றி இணைந்து நடித்திருக்கிறார் சூரி. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மிகவும் கொடூரமான காவல் அதிகாரியாக நடித்திருந்த சேத்தன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது “விடுதலை” திரைப்படத்தின் படப்பிடிப்பில் வெற்றிமாறன் நடந்துகொண்டது குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

வெற்றிமாறனிடம் இல்லாத பழக்கம்

அதாவது ஒரு காட்சியில் சேத்தனின் நடிப்பு வெற்றிமாறனுக்கு திருப்தியளிக்கவில்லையாம். ஆதலால் வெற்றிமாறன் சேத்தனிடம் எப்படி இந்த காட்சியில் நடிக்க வேண்டும் என தெளிவுப்படுத்தினாராம். அதன் பின் சேத்தன் இரவு முழுவதும் அந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று தனக்கு தானே பயிற்சி எடுத்துக்கொண்டு வந்தாராம்.

அந்த காட்சி படமாக்கப்பட, அந்த காட்சியில் சேத்தன் நடித்திருக்கிறார். அந்த காட்சி படமாக்கப்பட்டு முடிந்தபிறகு கட் என்று சொல்லிவிட்டு எதுவுமே சொல்லவில்லையாம் வெற்றிமாறன். அப்போது சேத்தன் வெற்றிமாறனிடம் சென்று, “சார் நீங்க சொன்ன மாதிரி நான் கரெக்ட்டா நடிச்சிருக்கேனா? எதுவுமே சொல்லமாட்டிக்கீங்களே” என கேட்டிருக்கிறார்.

உடனே வெற்றிமாறன், “சாரி சாரி, எனக்கு இப்படி ஒரு பழக்கமே வரமாட்டிக்கு. தனுஷ் கூட அடிக்கடி கூறுவார். என்ன சார் ஒரு ‘Good’ன்னு கூட சொல்லமாட்டிக்கீங்களேன்னு. சத்தியமா எனக்கு எனக்கு அது வரமாட்டிக்கு, ஏன்னு தெரில” என கூறினாராம்.

Arun Prasad
Published by
Arun Prasad