
Cinema News
Vijay TVK: விஜய் வீட்டில் வெடிகுண்டு சோதனை.. பிடிபட்ட அந்த நபர் யார்? போலீஸார் விசாரணை
Vijay TVK: தவெக தலைவரும் நடிகருமான விஜய் வீட்டில் உள்ளே நுழைந்த நபர் நேற்று ஒரு நாள் முழுவதும் உள்ளே இருந்து பிடிபட்டார். இதன்படி Y பிரிவுகள் அதிகாரிகளின் பரிந்துரையின் படி விஜய் வீட்டில் பாதுகாப்பு குறைகள் குறித்து போலீஸார் சோதனை செய்ய உள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் வீடு நீலாங்கரையில் அமைந்துள்ளது.இவரது வீட்டில் நேற்று முன் தினம் உள்ளே ஒரு நபர் நுழைந்திருக்கிறார்.
அதுவும் வீட்டின் பின்பக்கம் வழியாக உள்ளே நுழைந்திருக்கிறார். அன்றைய நாள் முழுவதும் உள்ளேதான் இருந்திருக்கிறார். நேற்று விஜய் தான் அந்த நபரை பார்த்து காவலாளிகளிடம் ஒப்படைத்திருக்கிறார். விஜயை பார்த்ததும் அந்த நபர் ஓடி வந்து விஜயை கட்டி பிடித்திருக்கிறார். உடனே விஜய் அவரை ஆசுவாசப்படுத்தி காவலாளிகளிடம் ஒப்படைத்திருக்கிறார்.
ஆனால் அந்த நபர் சற்று மன ரீதியாக பாதிக்கப்பட்டவர் என போலீஸார் கூறுகின்றனர். அதனால் மருத்துவமனையில் அந்த நபரை அனுமதித்திருக்கின்றனர். ஒரு நாள் முழுவதும் அந்த நபர் விஜய் வீட்டில் உள்ளே இருக்க இவருடன் வேறு யாரேனும் உள்ளே நுழைந்தார்களா என்றும் போலீஸார் சந்தேகத்தை முன் வைத்திருக்கின்றனர். பாதுகாப்பையும் மீறி அந்த நபர் உள்ளே நுழைந்திருக்கிறார் என்றால் விஜய் வீட்டில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் இருக்கிறதா என்று போலீஸாருக்கு y பிரிவு அதிகாரிகள் சோதனை செய்யுமாறு பரிந்துரை செய்திருக்கின்றனர்.
அதோடு வெடிகுண்டு செயலிழப்பு குழு மோப்ப நாய்களுடன் வந்து சோதனை செய்யவும் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவு்ம்Y பிரிவு அதிகாரிகள் பரிந்துரையின் படிதான் சோதனை செய்ய இருக்கிறார்கள். இன்னும் சிறுது நேரத்தில் விஜய் வீட்டில் சோதனை தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

பிடிபட்ட அந்த நபர் மதுராந்தகத்தை சேர்ந்தவர் என்றும் நான்கு வருடங்களாக அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்திருக்கிறது. வேளச்சேரியில் உள்ள தனது சித்தி வீட்டில்தான் அந்த நபர் தங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அந்த நபரை பிடித்து தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்திருக்கின்றனர்.