vivek
தமிழ் சினிமாவில் சின்னக் கலைவாணர் என அனைவராலும் மிக அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். நல்ல மனிதர். நல்ல பண்பாளர். தான் கூற வரும் கருத்துக்களை மக்களுக்கு எளிதில் சேரும் வகையில் அதை தன் நகைச்சுவைமிக்க நயத்தோடு வெளிப்படுத்துவதில் வல்லவராக விளங்கினார்.
அரசியல் கருத்துக்களில் இருந்து எல்லாவற்றையும் நகைச்சுவையாக வழங்குவதில் சிறந்தவராக இருந்தார். 80, 90களில் கவுண்டமணி, செந்தில் என இரட்டையர்கள் எப்படி சினிமாவை ஆட்கொண்டு வந்தார்களோ அவர்களை அடுத்து விவேக் , வடிவேலு என தனித்தனியாக தங்கள் ஆளுமைகளை நிரூபித்து வந்தனர்.
ஒரு பக்கம் வடிவேலு தன்னுடைய தனி பாணியில் ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.இந்த நிலையில் கொரானா கொரானாவுக்கிற்காக தடுப்பூசி போட்ட முதல் பிரபலமாக விவேக் இருந்தார். ஆனால் தடுப்பூசி போட்ட அன்றே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இது மிகவும் வைரலாக பேசப்பட்டது. கொரானா ஊசி போட்டதனால் தான் அவர் இறந்திருக்கக் கூடும் என மற்ற அனைவரும் ஊசி போட தயங்கினார்கள். இருந்தாலும் ஊசி தான் காரணம் என்று சொல்ல முடியாது. முதல் நாள் இரவு மது அருந்தியதால் அந்த பாதிப்பு தான் இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.
ஆனால் விவேக் மரணத்திற்கு முக்கிய காரணம் அவருக்கு இருந்த மன உளைச்சல் தான் என்று நடிகர் போண்டா மணி கூறினார். அவருக்கு ஏற்கெனவே மூன்று மகள்களாம். ஒரு ஆண் பிள்ளை வேண்டும் என்ற ஏக்கம் அவருக்கு இருந்ததாம். அதற்காக கோயில் கோயில்களாக சுற்றினாராம். அவர் கும்பிட்ட தெய்வம் அவரை கைவிட வில்லை. அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
ஆனால் விதி அதையும் விட்டு வைக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் அவரின் மகனுக்கு தீராத காய்ச்சல் உடல் நிலை மோசமடைந்து அவரது மகனும் இறந்து விட அந்த சோகம் அவரை கடுமையாக பாதித்திருக்கிறது. அதிலிருந்து அவரால் விடுபட முடியவில்லையாம். சரி டெஸ்ட் ட்யூப் பேபி மூலமாகவாவது ஆண் குழந்தையை பெற்று கொள்வோம் என்று அவரும் அவரது மனைவியும் முடிவெடுத்தார்களாம்.
இதையும் படிங்க : வெற்றிமாறனுக்கு இப்படி ஒரு குணம் இருக்கா?… சத்தியமா இதை நினைச்சிக்கூட பார்த்துருக்க மாட்டீங்க!
ஆனால் டெஸ்ட் ட்யூப் பேபி மூலமாக பிறந்ததும் இரட்டை பெண் குழந்தைகளாம். இது மேலும் அவருக்கு மன உளைச்சலை தந்ததாம். இதை வெளியில் சொன்னால் கேவலம் என்று நினைத்தாராம். இந்த சோகங்களை எல்லாம் நினைத்து நினைத்து மதுவுக்கு அடிமையாகி விட்டாராம் விவேக். இந்த காரணங்களால்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் இது கடவுள் போட்ட கணக்கு , யாராலும் மாற்ற முடியாது என்றும் போண்டா மணி கூறினார்.
Vijay Devarakonda:…
Kantara Chapter…
STR49 :…
TVK Vijay:…
Vijay: தமிழ்…