Connect with us
siruthai_siva

latest news

சிரிச்சே கவுத்துப்புட்டீயே சின்ராசு.. ‘கங்குவா’ படத்தில் சிறுத்தை சிவா பண்ண வேலையை பாருங்க

சூர்யாவின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த கங்குவா திரைப்படம் இப்போது பல ட்ரோலுக்கு ஆளாகி இருக்கிறது. படத்தைப் பற்றி நெட்டிசன்கள் பலவிதங்களில் மீம்ஸ்களை போட்டு கங்குவா படத்தை வச்சு செய்து வருகின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியான இந்த படம் கடந்த 14ஆம் தேதி உலகெங்கிலும் ரீலீஸ் ஆனது.

பெரிய பட்ஜெட்டில் பல மொழிகளில் ரிலீசான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். படம் வெளியாகி முதல் நாளிலேயே படத்தை பற்றி ஒட்டுமொத்த ரசிகர்களும் கழுவி ஊற்றினர். சூர்யாவின் இதுவரை வெளியான படங்களில் இந்த கங்குவா திரைப்படத்திற்கு தான் இந்த மாதிரி விமர்சனங்கள் வெளியாகி இருக்கின்றன.

இதையும் படிங்க: தனுஷ் இறங்கி வந்தும் கெத்து விடாத நயன்தாரா! பிரச்சினையின் ஆரம்பப்புள்ளியே இதுதானாம்

இதன் காரணமாகத்தான் ஜோதிகா அப்படி ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். ஆனால் படத்தில் சூர்யாவின் நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இப்படி ஏன் தொடர்ந்து பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது என்று பார்க்கும் பொழுது ஆரம்பத்தில் இந்த படத்தின் ஒட்டுமொத்த டீமும் வெளிப்படுத்திய அந்த ஓவர் கான்ஃபிடன்ஸ் தான் .அந்த அளவுக்கு பில்டப் செய்து பேசியது, ரசிகர்கள் அதே மூடில் படத்தை பார்க்க சென்றிருக்கின்றனர்.

ஆனால் அவர்கள் சொன்னதை போல படத்தில் இல்லையே என  அந்த கொந்தளிப்பில் படத்தைப் பற்றி விமர்சனமாக வெளியில் சொல்ல ஆரம்பித்தனர் .இந்த நிலையில் சிறுத்தை சிவாவை பற்றிய ஒரு தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது. மேடையில் பேசும்பொழுது தயாரிப்பாளரிலிருந்து படக்குழுவில் உள்ள அனைவருமே படத்தை பார்த்து விட்டோம் என்று சொல்லி இருந்தனர். ஆனால் உண்மையில் சிறுத்தை சிவா முழு படத்தையும் யாருக்குமே காட்டவில்லையாம் .

இதையும் படிங்க: நெகட்டிவிட்டிய சொன்னாதான் ரீச் ஆகுது?!.. கங்குவா படம் குறித்து நடிகர் சூரி சொன்ன விமர்சனம்!…

ஒரு படத்தின் டிரைலரை எப்படி எடுக்கிறார்களோ அதாவது முக்கியமான சீனை மட்டும் மெர்ஜ்செய்து ட்ரைலராக கொடுப்பார்கள். அதே மாதிரி சிறுத்தை சிவாவும் இந்த படத்தில் ஒரு 30 நிமிட காட்சியாக படத்தில் இருக்கும் முக்கியமான காட்சிகளை மட்டும் ஒன்று சேர்த்து அதை காண்பித்திருக்கிறார். அதை பார்த்துவிட்டு தான் சூர்யாவிலிருந்து அனைவருமே படத்தை ஆஹா ஓஹோ என பாராட்டி இருக்கிறார்கள் .ஆனால் இதை எப்படி தயாரிப்பாளர் சம்மதித்தார் என்று தான் தெரியவில்லை. ஒரு முழு படத்தை பார்த்துவிட்டு தான் எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும் .இவர்கள் படத்தையே பார்க்காத போது எப்படி ரிலீஸ் செய்ய ஒப்புக் கொண்டனர் என்று தெரியவில்லை என கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in latest news

To Top