விஜய் சேதுபதிக்கு உற்சாக வரவேற்பு... பாகுபலி எலைட் கிளப்பில் இணையும் உப்பன்னா

அறிமுக இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் புதுமுகங்களான வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் கடந்த 12-ம் தேதி வெளியானது உப்பன்னா படம். இதில், ஹீரோயினின் தந்தையாக நெகட்டிவ் ரோலில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். படம் வெளியாகி ஆந்திரா, தெலங்கானாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
படம் வெளியாகி மூன்றாவது நாளான பிப்ரவரி 14-ம் தேதி மட்டும் ஆந்திரா, தெலங்கானாவில் 8 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது உப்பன்னா படம். இது டோலிவுட்டில் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. டோலிவுட்டில் இதற்கு முன்னதாக பாகுபலியின் இரண்டு பாகங்கள் உள்ளிட்ட 6 டோலிவுட் படங்கள் மட்டுமே இதற்கு முன்னர் இந்த சாதனையைப் படைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால், படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.