நான் பாக்குறது தமிழா.. இல்ல தெலுங்குப் படமான்னு தெரியாது... நடிகையின் ஓப்பன் டாக்

அறிமுக இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்த்கில் வைஷ்ணவ் தேஜ் - கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் படம் உப்பன்னா. இதில், காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஹீரோயினின் தந்தையாக விஜய் சேதுபதி நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார். இந்தப் படம் 12-ம் தேதி வெளியாகிறது.
தனது அனுபவங்கள் குறித்து ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி பேசுகையில், ``நான் மும்பையில் விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். என்னைப் பார்த்த இயக்குனர் புச்சி பாபு, படத்தில் நடிக்க ஆர்வம் உண்டா என மெசேஜ் அனுப்பினார். கதையைக் கேட்டவுடன் என்னால் `நோ’ சொல்ல முடியவில்லை.
விளம்பரங்களில் நடிக்கும்போது இப்படி மரியாதை கிடைத்ததில்லை. மக்கள் அவ்வளவு ஆதரவும் மரியாதையும் கொடுக்கிறார்கள். வைஷ்ணவ் தேஜ் சிறந்த நடிகர். தன்னுடன் நடிப்பவர்களுக்கு நிறைய ஒத்துழைப்புக் கொடுப்பார். நான் நிறைய டப்பிங் படங்கள் பார்ப்பேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அது தமிழ்ப் படமா அல்லது தெலுங்குப் படமா என்று எனக்குத் தெரியாது. இந்தப் படத்தில் நடித்தது மிகச்சிறந்த அனுபவம்’’ என்று கூறி நெகிழ்ந்திருக்கிறார்.