×

விஜய் சேதுபதி படத்தால் மோதிக்கொள்ளும் பெரிய `கை’கள்! 

விஜய் சேதுபதி நடித்திருக்கும் நேரடித் தெலுங்குப் படமான `உப்பன்னா’ விரைவில் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. 
 

வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக அறிமுகமாகும் உப்பன்னா படத்தில் ஹீரோயினுக்குத் தந்தையாக நெகட்டிவ் ரோலில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். படம் கடந்தாண்டு ஏப்ரலில் ரிலீஸுக்குத் திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா சூழலால் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. 

இப்போது படம் ரிலீஸுக்குத் தயாராகியிருக்கிறது. படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான மைத்ரி மூவிமேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. கடந்தாண்டு ரிலீஸ் திட்டத்தின்போது நிஜாம் ஏரியா விநியோக உரிமையை தெலுங்கின் மற்றொரு முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூ கேட்டதாகச் சொல்கிறார்கள். இதற்காக ரூ.4 கோடி விலை பேசப்பட்டு ஒரு கோடி ரூபாய் தில் ராஜூ சார்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அதேநேரம், தில் ராஜூ ஒரு கோடி ரூபாயெல்லாம் கொடுக்கவில்லை; வாய்மொழியாகவே பேசப்பட்டிருந்தது என்றும் சொல்கிறார்கள். 

ஆனால், தற்போதைய ரிலீஸின் போது 4 கோடி ரூபாய் கொடுக்க முடியாது என தில் ராஜூ கூறியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே உப்பன்னா படத்தை நிஜாம் ஏரியாவில் விநியோகிக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இது தில் ராஜூ தரப்பை கடும் அதிருப்தியில் தள்ளியிருக்கிறது. உப்பன்னா பட ரிலீஸ் விவகாரத்தில் தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர்கள் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியிருக்கிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News