மதுரை ரெடியா? - சூர்யாவின் கருப்பு பட இசை வெளியீட்டு விழா குறித்த சூப்பர் அப்டேட்!
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் படம் கருப்பு. தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் சூர்யாவிற்கு இந்த படம் நிச்சயம் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்ப்பர்க்கப்படுகிறது. இப்படத்தில் சூர்யாவுடன் திரிஷா, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் மே 14-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில் "மதுரை ரெடியா..?" என்று ஒரு சுருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு, கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவை வைத்துதான் பகிரப்பட்டுள்ளது என்பதை சினிமா வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி மதுரையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படம் தென் மாவட்டங்களில் வழிபடப்படும் தெய்வமான கருப்புசாமி யை மையமாக வைத்து, ஒரு பக்கா கமர்ஷியல் மற்றும் ஆக்ஷன் எண்டர்டெய்னராக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் மையக்கருவும், தலைப்பும் தென் மாவட்டங்களை சார்ந்து இருப்பதால், அந்த மண்ணின் மக்களுடன் இணைந்து இந்த விழாவைக் கொண்டாட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ரஜினி சாரின் முத்து, படையப்பா விஜயின் கில்லி போன்று லாஜிக் குறைகள் இல்லாத, குடும்பத்துடன் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு தரமான படமாக கருப்பு இருக்கும்" என ஆர்.ஜே. பாலாஜி சமீபத்தில் கூறியிருந்தார்.
