அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதய நிதி ஸ்டாலின் நடித்த படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தில் உதய நிதி போலீஸாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக தான்யா நடித்திருப்பார். மேலும் படத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி, மயில் சாமி போன்ற நடிகர்களும் நடித்திருந்தனர்.
படம் சாதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாக அமைந்திருந்தது. சாதி எல்லாருக்கும் சமமல்ல. சட்டம் தான் அனைவருக்கும் சமம் என்பதையே படம் உணர்த்தும் மாதிரியாக அமைந்திருந்தது.
படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. முதல்வரும் படத்தை பார்த்து மனமார வாழ்த்தினார். இந்த நிலையில் நடிகர் கமலும் இந்த படத்தை சமீபத்தில் பார்த்துள்ளார். பார்த்து படக்குழுவினரை சந்தித்துள்ளார்.
உதய நிதியுடன் தயாரிப்பாளர் போனிகபூர் உட்பட பலரும் கமலை பார்த்து வாழ்த்துக்களை பெற்றனர். அனைவரையும் மனதார பாராட்டியுள்ளார் கமல். மேலும் கமலுக்கு பரிசாக பெரியார் சிலையும் அம்பேத்கர் சிலையையும் உதய நிதி கொடுத்து தன் சந்தோஷங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…