நிலாவிலே பார்த்த வண்ணம்…. விஜய்யையே பின்னுக்கு தள்ளிய உத்ரா உன்னிகிருஷ்ணன்!
பாடகர் உன்னிகிருஷ்ணன்:
இந்திய சினிமாவில் திரைப்பட பின்னணி பாடகராக இருந்து பெரும் புகழ்பெற்றவர் தான் உன்னிகிருஷ்ணன். கர்நாடக இசை பாடகர் ஆன இவர் தமிழ் திரைப்படத் துறையில் பல்வேறு வெற்றி திரைப்படங்களுக்கு பாடல் பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்ரா:
இவரது மகள் தான் உத்ரா உன்னிகிருஷ்ணன். சைவம் உள்ளிட்ட திரைப்படங்களில் மிகச் சிறந்த பாடல்களை பாடி தேசிய விருது வாங்கி அனைவரது கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக திரைப்படங்களுக்கு பாடல் பாடிவரும் உத்ரா உன்னிகிருஷ்ணன் சமீபத்தில் நடைபெற்ற பாடல் கச்சேரி ஒன்றில் "நிலாவிலே பார்த்த வண்ணம்" என்ற பாடல் பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
வைரல் வீடியோ:
அவரது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக உத்ரா உன்னிகிருஷ்ணன் குரலில் எல்லோரும் மயங்கி போய் விட்டனர். குறிப்பாக இந்த ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாகி விஜய்யின் அரசியல் பிரச்சனைகளுக்கு இடையேயும் இது பேசுப்பொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
