Categories: Cinema News latest news

தொடர்ந்து லீக் ஆகும் வாடிவாசல் போட்டோஸ்.! கண்டுகொள்ளாத வெற்றிமாறன்.! காரணம் இதுதான்.!

தற்போதைய கோலிவுட் ஹாட் டாபிக் என்னவென்றால் அது வாடிவாசல் ஷூட்டிங் தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விறுவிறுப்பாக நடந்து வருவது தான்.  வெற்றிமாறன் இயக்கதில் சூர்யா தற்போது இந்தபட ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார்.

இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். இப்படம் ஷூட்டிங் இன்னும் சில மாதங்கள் கழித்து தான் தயாராக உள்ளது. இந்த பட ஷூட்டிங் புகைப்படங்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெளியாகி கொண்டே இருக்கிறது.

ஆனால் அது பற்றி இயக்குனரோ அல்லது படக்குழுவோ கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஏனென்றால், இந்த ஷூட்டிங் நிஜமானது அல்ல. ஆம், இது வெறும் டெஸ்ட் ஷூட்டிங் தான். இதனை ஒரு வாரம் நடத்தி அதின் மூலம் என்னென்ன தேவைப்படுகிறது என்பதை தேர்ந்து கொண்டு, அடுத்து அதற்கான வேலைகளை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இதையும் படியுங்களேன் – இளையராஜா இடத்தை தட்டி தூக்கிய அனிருத்.! இந்த பெருமை ஏ.ஆர்.ரகுமானுக்கு கூட கிடைக்கவில்லையே.!

அதனால் தான் படக்குழு கவலைப்பட்டதாக தெரியவில்லை. மேலும், வெற்றிமாறன எதனையும் ஒளித்து மறைத்து எடுக்கும் ஆள் இல்லை. அவர் கதையை முன்கூட்டியே கூட கூறிவிடுவார். இல்லையென்றால், இந்த புத்தகத்தில் இருந்து தான் படமாக்கினோம் என கூறிவிடுவார். ஏனென்றால், கதையை முழுதாக கூறினாலும், படம் பார்க்கும் நமக்கு அது புதுசாகவே இருக்கும். காட்சி அமைப்பு, கதாபாத்திர வடிவைப்பு, நடிகர்களின் நடிப்பு என நம்மை அந்த படத்திற்குள் அசால்டாக கொண்டு சென்றுவிடுவார்.

இந்த காரணங்களுக்காக தான் வாடிவாசல் டெஸ்ட் ஷூட்டிங் புகைப்படங்கள் இணையதில் வெளியானாலும் கவலைகொள்ளாமல் படக்குழு இருக்கிறதென்று கூறப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan