Vaali
கவிஞர் வாலி தமிழ் சினிமாவில் பல்லாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். அவரது வரிகள் அத்தனையும் காலத்திற்கும் பேசக்கூடியவை. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் என கடந்த மூன்று தலைமுறை நடிகர்களுக்கும் பாடல்கள் எழுதிய பெருமை வாலியையே சேரும்.
Poet Vaali
காலத்திற்கு ஏற்றார்போல் தன்னை அப்டேட் செய்துகொள்பவர் வாலி. ஆதலால்தான் அவரால் எம்.ஜி.ஆருக்கு “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” போன்ற பாடல்களையும் சிவகார்த்திகேயனுக்கு “மின்வெட்டு நாளில் இங்கே” போன்ற பாடல்களையும் எழுத முடிந்தது. இதனால்தான் அவரை வாலிப கவிஞர் என அழைக்கின்றனர்.
எப்போதும் மிகவும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர் வாலி. அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் கார்ட்டூனிஸ்ட் மதனுடன் ஒரு பேட்டி அளித்திருந்தார். அப்போது பல கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் சொன்னார் வாலி.
Madhan Cartoonist
அந்த பேட்டியில் கார்ட்டூனிஸ்ட் மதன் “நடிகைகளுடன் பழகிய அனுபவம் குறித்து கூறுங்கள்” என கேட்டார். அதற்கு பதிலளித்த வாலி “பெரிய நடிகைகளோடு ஒன்றாக தண்ணி அடித்திருக்கிறேன்” என கூறினார்.
இதை கேட்ட மதன் “அது பற்றிக் கொஞ்சம் மேலே கூறமுடியுமா?” என சிரித்துக்கொண்டே கேட்டார். “யாருடன் மது அருந்தினேன் என்றெல்லாம் கூறமுடியாது” என நகைச்சுவையாக கூறினார் வாலி.
Vaali
அதற்கு மதன் “நடிகைகளுடன் மது அருந்திய பிறகு நடந்த விளைவுகள் என்ன?” என குறும்பாக கேட்டார். அதற்கு வாலி “நடிகைகளுடன் மது அருந்தியது வரை மட்டும்தான் என்னால் கூறமுடியும். அதற்கு மேல் கூறமுடியாது. அது சென்சார் செய்யப்பட்டுவிட்டது” என தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன் கூறினார். இந்த பேட்டியே மிகவும் கலகலப்பான பேட்டியாக அமைந்தது.
STR49 :…
TVK Vijay:…
Vijay: தமிழ்…
Idli kadai:…
Vijay: கரூரில்…